thalaivar-169-movie-rumour update
இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார்.
நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து அதன் காரணமாக ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வி எழுந்த நிலையில் இருவரது கூட்டணியின் படம் உருவாவது உறுதி என தகவல் வெளியானது.
இதனையடுத்து நெல்சன் ரஜினியை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் திரைக்கதை அமைக்கும் வேலைகளில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் எந்த விதத்திலும் பணியாற்றவில்லை. அவர் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அவர்களை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் நிச்சயம் இது படத்தில் நடிப்பார் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
Mudhal Parvai Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…
Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal
All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…
Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…
நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…