Latest Tamil cinema News
ஆன்மீகம்

பூஜை மணியில் நந்தி, சக்கரம் இருப்பது ஏன் தெரியுமா? தெரிந்து கொள்வோமா?.

* சிவாச்சாரியார்கள் பயன்படுத்தும் மணிகளின் கைப்பிடி மேல் நந்தி காணப்படும். நந்தி என்பது சிவபெருமானின் வாகனமாகும். அதுமட்டுமல்ல நந்தி என்பது அறத்தின் (தர்மத்தின்) குறியீடாக கருதப்படுகிறது.

* இறைவன் தர்மத்தின் மீது பயணிக்கிறார். சிவலோகத்தில் நந்தியம்பெருமான் பொற்பிரம்பை ஏந்தி தேவர்களை வழிநடத்துவதாக சில புராணங்கள் கூறுகின்றன.

* எனவே இறைவனின் முன்னே தர்ம குணத்தோடு நின்று வழிபட வேண்டும். தர்ம சிந்தனைகளையே வேண்டுதலாக பெற வேண்டும் என்பதை உணர்த்தவே பூஜை நேரத்தில் சத்தம் கொண்டு ஒலிக்கச் செய்தார்கள். அவ்வாறு ஒலிக்கும் மணியில் அறத்தின் குறியீட்டை வைத்தார்கள்.

* இதுபோல, பெருமாள் கோவில் மணியில் சக்கரம் காணப்படும். சக்கரம் என்பது அழிக்கும் ஆயுதம். அதர்மத்தை அழிக்கும் குறியீடாக கருதப்படுகிறது. அவற்றை இறைவன் நாராயணன் விரல்களில் ஏந்தியுள்ளார்.

* அதர்மத்தின் வழி சென்றால், அவதாரம் பல எடுத்த இறைவன் சக்கராயுதம் கொண்டு வேர் அறுப்பார் என்பதை நினைவு படுத்தவே ஒலிக்கும் மணியில் சக்கரத்தை வைத்தார்கள்.

Related posts

தூங்கும்போது சிலரை எழுப்பக்கூடாது ஏன்?

user

ரதசப்தமி வழிபாடு பற்றி தெரிந்து கொள்வோமா?.

user

ஏன் சூரிய வழிபாடு தினமும் செய்ய வேண்டும்? தெரிந்துகொள்வோமா!

user