Latest Tamil cinema News
மருத்துவம்

பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள் பார்ப்போமா?

1) பாதாம் பருப்பினை வறுத்து அடிக்கடி உண்டு வர, கண் பிரச்சனை தெளிவு பெறும்.

2) ஒரு டம்பளர் கொதிநீரில் ஒரு ஸ்பூன் தேனை கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வயிற்று வலி பறந்து விடும்.

3) வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.

4) வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

5) முளைக்கீரை, அதிமதுரம், மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

6) நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

7) எருக்க இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.

8) தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்

9) சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

10) காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

11) காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும்.

Related posts

மூட்டுத் தேய்மானத்திற்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போமா?

user

மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

user

மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன? தெரிந்து கொள்வோமா!

user

Leave a Comment