விக்னேஷ் சிவனின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்ட மர்ம நபர்கள்.விக்னேஷ் போட்ட பதிவு

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சமீபத்தில் இவரது சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டது. மேலும் படிக்க 2012 -ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். விக்னேஷ் சிவன் இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இதைத்தொடர்ந்து இவர் ‘லவ் டுடே’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் பதிவு இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனின் சமூக வலைதள கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த கணக்கை விக்னேஷ் சிவன் மீட்டெடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் சமூக வலைதள கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு மிக்க நன்றி. அப்ப.. அப்ப.. பண்ணுங்க ” என்று தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

jothika lakshu

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

6 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

6 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

6 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

6 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

8 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

12 hours ago