Latest Tamil cinema News
ஆன்மீகம்

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது ஏன்? தெரிந்து கொள்வோமா?

* பொதுவாகவே இரவெல்லாம் உள்ளுறுப்புகள் வேகமாக வேலை செய்யும். இதனால் காலையில் விழிக்கும்போது நம் உடலும் உறுப்புகளும் சோர்வாக இருக்கும். ரத்த ஓட்டமும் இதயத்துடிப்பும் கூட குறைவாக இருக்கும்.

* சூரியநமஸ்காரம் செய்வதால் உடல் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டம் அதிகமாகி உடலும் உள்ளமும் சுறுசுறுப்படைகிறது.

* மலச்சிக்கல், பசியின்மை உள்ளிட்ட பல நோய்களுக்கு தீர்வாக இந்த சூரியநமஸ்காரம் இருக்கிறது. எனவே இதை ஆன்மீக விஷயமாக மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சியாகவும் மேற்கொள்ளுதல் அவசியம்.

* விடியற்காலையில் அதாவது சூரியன் உதயமாகும் நேரத்திற்குள் எழுந்து காலைக்கடன்களை முடித்த பிறகு குளித்து, சுத்தமான ஆடை அணிந்து கொள்ளவும்.

திருநீறு, குங்குமம், திருமண் இதில் எதையாவது நெற்றியில் இட்டுக் கொண்டு கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை வணங்குவது சூரிய நமஸ்காரம்.

* மூச்சை உள்ளிழுத்து கைகளை மார்பை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு கைகூப்பி வணங்கலாம்.

Related posts

பஞ்சமியில் வராஹி வழிபாட்டின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

user

வாஸ்துப்படி அமைக்கும் மாடிப்படி முன்னேற்றத்தின் ஏணிப்படி!.

user

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி தரும் சிறை காத்த அய்யனார் மகிமை, பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

Leave a Comment