supreme-court-orders-no-stay-in-criminal-case-against-vijay-sethupath
“நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. தன்மீதான விசாரணைக்கு தடைக்கோரி விஜய் சேதுபதி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருதரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காணும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க அறிவுறுத்தப்பட்டதே? அது என்ன ஆனது என்று கேட்டனர்.பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறினார்கள். மேலும் இந்த விவகாரத்தில் தன்னை குறித்து எதிர்தரப்பினர் தான் அவதூறு பரப்பியதாக விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் விஜய்சேதுபதியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளு படி செய்தனர். கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் சந்திக்க விஜய் சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.”,
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…