Latest Tamil cinema News
ஆன்மீகம்

ஏன் சூரிய வழிபாடு தினமும் செய்ய வேண்டும்? தெரிந்துகொள்வோமா!

🌞 காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும்.

🌞 நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன். அனைவருக்கும் முதலில் வணக்கம் சொல்லி எழுப்புவதும் சூரியன் தான். அதனால், தினமும் காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையைக் கொண்டு தரும்.

🌞 சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.

🌞 சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

🌞 காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். வாழ்வில் எல்லா நலன்களும் கைகூடும்.

🌞 காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும்.

🌞 சூரியன், ஒரு மகத்தான சக்தி.  கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன. கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர்.

Related posts

குளித்து விட்டு ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜை, வழிபாடுகளை செய்யலாமா?

user

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி தரும் சிறை காத்த அய்யனார் மகிமை, பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

தத்து பிள்ளைகளுக்கும் ஜாதகம் எழுதலாமா? இந்த குழப்பத்தை தெரிந்து கொள்வோமா!.

user