யூடியூபில் படங்களை விமர்சனம் செய்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சினிமா துறை..

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியானதும் அந்த படம் வெற்றி பெறுமா பெறாதா என்பதை தீர்மானிப்பது படம் பார்த்தவர்கள் சொல்லும் விமர்சனங்களாகத்தான் இருக்கிறது.

அன்றைய காலங்களில் ஒரு படம் வெளியானால் அந்த படம் எப்படி இருக்கிறது என்னவெல்லாம் பிளஸ் என்னவெல்லாம் மைனஸ் என்பதை பெரிய பத்திரிகைகள் மட்டும்தான் ஆராய்ந்து அலசி விமர்சனங்களாக வெளியிட்டன.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெருகிவிட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்கள் காரணமாக படம் வெளியான அன்றே அந்த படம் எப்படி இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்ய தொடங்கி விடுகின்றனர். அதிலும் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் போன்ற சில விமர்சகர்கள் படத்தில் நெகட்டிவ் என்ன என்பதை பெரிதுபடுத்தி பேசி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனால் நல்ல படங்கள் மீது கூட மக்களுக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் போய் விடுகிறது. இதன் காரணமாக சினிமாத்துறை கூட்டம் ஒன்றைக் கூட்டி அதில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

அதாவது படம் வெளியான மூன்று நாட்கள் பின்னரே யாராக இருந்தாலும் அந்த படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் திரையரங்குகளுக்கு முன்பாக கேமரா மைக்கை தூக்கி கொண்டு சென்று யாரும் நிற்கக்கூடாது என பல நிபந்தனைகள் போடப்பட்டிருப்பதாகவும் விரைவில் இவை அனைத்தும் நடைமுறைக்கு வரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் யூட்யூப் சேனல்கள் மூலம் விமர்சனம் செய்து வரும் விமர்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சினிமா துறையில் நடைமுறைக்கு வருவதாக சொல்லப்படும் இந்த கட்டுப்பாடுகளை மக்கள் வரவேற்பார்களா அல்லது எதிர்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

strong-conditions-for-youtube reviewers
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

23 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

24 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

24 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

1 day ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

1 day ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

1 day ago