Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Sreeleela Joins Rajinikanth’s Dharman Official Announcement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலீலாவை வரவேற்று வெளியிட்டுள்ள பதிவில், “SHE’S GOT THE SPARK, SHE’S GOT THE PATAKA” எனக் குறிப்பிட்டு, அவரை ‘தர்மன்’ திரைப்படக் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளது.

தனது நடனம் மற்றும் துடிப்பான நடிப்பால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள ஸ்ரீலீலா, தற்போது ரஜினிகாந்துடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். மேலும், ‘கெட்ட பையன் சார்’ என்ற டேக்லைனுடன் இப்படம் உருவாகி வருகிறது.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு, பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ஸ்ரீலீலாவின் வருகையும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.