special-treat-to-makkal-selvan-vijay-sethupathi
பிரைம் வீடியோ, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமேசான் ப்ரைம் நிறுவனம், இந்தியா முழுவதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஃபார்சி இணைய தொடரிலிருந்து விஜய் சேதுபதி கதாப்பாத்திர காணொளி வெளியிட்டுள்ளது. ஏமாற்றுவதில் வல்லவனாக இருக்கும் ஆர்டிஸ்ட் எனும் ஷாகித் கபூர் பாத்திரத்தை துரத்தி பிடிக்கும் மைக்கேல் எனும் காவலதிகாரி பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்த நாட்டிலிருந்து கள்ளநோட்டுக் கும்பலை ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் ஒரு காவல் அதிகாரியின் அதிரடியான வாழ்க்கையை அசத்தலாக காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ காட்சிகள். கள்ள நோட்டு கும்பலில் பின்னால் இருக்கும் மனுசுக் (கே கே மேனன்) மற்றும் ஆர்டிஸ்ட் ( ஷாகித் கபூர் ) இருவரையும் பிடிக்க விஜய் சேதுபதியின் காவலதிகாரி பாத்திரம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் குறும்புத்தனமான நடவடிக்கைகளை நம்மால் ரசித்து மகிழாமல் இருக்கவே முடியாது. ஆட்டம் போட வைக்கும் ஒரு அற்புதமான பின்னணி இசையோடு, கூடிய இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கும் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களுக்கும் அவரது பிறந்த நாளில் ஒரு அற்புதமான விருந்தாக இருக்கும்.
இந்த க்ரைம் திரில்லர் தொடர் ராஜ் & டிகே ஆகியோரின் பிரத்யேகமான நகைச்சுவையுடன் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. கொண்டது. பணாக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் சிஸ்டத்தை ஏழ்மை பின்னணியில் வாழும் இளைஞன் தன் சாமார்த்தியத்தால் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை அவனது பார்வையில் சொல்கிறது எட்டு எபிசோட்கள் கொண்ட ஃபார்ஸி தொடர்.
இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடர் பிப்ரவரி 10 அன்று இந்தியா மற்றும் உலகமெங்கும் 240 நாடுகளில் வெளியிடப்படுகிறது .
.
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…