ஆதரவற்ற முதியவர்களுக்காக களமிறங்கிய சோனு சூட்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியவர்கள் சிலரை நகராட்சி ஊழியர்கள், ஒரு லாரியில் அடைத்து இந்தூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலை அருகே முரட்டுத்தனமாக இறக்கிவிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதைப்பார்த்த சோனு சூட், ”சில முதியவர்களை நகரிலிருந்து கொண்டு போய் புறநகர்ப் பகுதியில் இறக்கி விடுவதாக ஒரு செய்தி என் கண்ணில் பட்டது. அவர்களுக்கு ஒரு வீட்டை உருவாக்கித் தர இந்தூரில் இருக்கும் சகோதர, சகோதரிகள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய உரிமையை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.

மேலும், அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும், தங்க வீடும் வழங்க விரும்புகிறேன். உங்களுடைய உதவி இல்லாமல் இதை என்னால் செய்ய இயலாது. வயதான தங்கள் பெற்றோரைக் கைவிடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்”

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

Suresh

Recent Posts

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

2 hours ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

2 hours ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

9 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

9 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

9 hours ago