Categories: Health

கற்றாழையின் பயன்தரும் சில முக்கிய குறிப்புக்களை பார்ப்போம் !

முகம் கழுவுவதற்கும் கற்றாழைச் சோற்றைப் பயன்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஃபேஸ் மாஸ்க்காகவும் அதனைப் பயன்படுத்தலாம். இதனை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

கற்றாழையில் பல வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன, இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது என்று கருதப்படுகிறது, மேலும் இதிலுள்ள அமிலங்களும் நொதி உடல்நலத்தை மேம்படுத்துகின்றன என்றும் கூறப்படுகிறது.

கற்றாழையில் உள்ள புரோட்டியோலிட்டிக் நொதியானது, தலையின் சருமத்தில் உள்ள சேதமடைந்த செல்களை சரிப்படுத்த உதவுகிறது. முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது, தலையில் பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.

இருமல் மற்றும் ஜலதொஷத்தில் இருந்து நிவாரணம் பெறவும் கற்றாழை உதவுகிறது. கற்றாழை ஒரு மலமிளக்கியாகவும் செயல்படும் என்று கூறப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.

கற்றாழையில் பூஞ்சை எதிர்ப்புப் பண்பு அதிகமுள்ளது, இதனால் வறண்டுபோன, அழற்சி உள்ள சருமத்தின் மீது இதனைப் பூசினால் நோய்த்தொற்றினால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் குறையும். எனினும், இதனைப் பயன்படுத்தும் முன்பு உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே நல்லது.

கற்றாழைச் சோற்றை ஓட்மீல் மற்றும் பாடி லோஷனுடன் கலந்து பயன்படுத்தினால் மிகுந்த பலன்களைக் கொடுக்கும். அது இறந்த செல்களை அகற்றவும் பாதத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கவும் உதவுகிறது.

கற்றாழையில் பல இயற்கையான தாதுக்கள் உள்ளன, உங்கள் புருவங்களுக்கு அழகிய வடிவம் கொடுக்க அவை மிகவும் உதவும். கற்றாழைச் சோற்றையும் விளக்கெண்ணெய்யையும் சம அளவு கலந்து கொண்டு தினமும் புருவங்களில் பூசுங்கள், சில நாட்களில் வித்தியாசத்தைக் காணலாம்.

admin

Recent Posts

சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சிங்கம் புலி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

5 hours ago

சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…

5 hours ago

வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…

6 hours ago

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

1 day ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

1 day ago