Latest Tamil cinema News
மருத்துவம்

உள்ளங்கைகளில் தோல் உரிதல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?

🤲 உள்ளங்கைகளில் தோல் உரிவது ஒரு சாதாரண பிரச்சினை தான். இந்த தோல் உரிதல் பொதுவாக வறண்ட சருமம், எக்ஸிமா, சூரிய ஒளி தாக்குதல், சோரியாஸிஸ், வைட்டமின் ஈ குறைபாடு, அடிக்கடி கை கழுவுதல், கெமிக்கல் மிகுந்த சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துதல், வறண்ட அல்லது குளிர்ந்த பருவ நிலை மாற்றம், அழற்சி இவற்றால் ஏற்படுகிறது.

🤲 உணவில் தினம் ஒரு கீரை, காய்கறிகள் எடுத்துக்கொள்வது, வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இதனைக் குறைக்கலாம்.

🤲 மேலும், குளிக்கும்போது ஒரு காலை மற்றொரு பாதத்தால் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால், காலில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி, ஊட்டத்தை அளிக்கும்.

🤲 ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் லெமன் மற்றும் தேனை சேர்த்து பத்து நிமிடத்திற்கு கைகளை அந்த நீரில் வைக்க வறண்ட சருமம் மென்மையாகும்.

🤲 விட்டமின் ஈ ஆயிலை கைகளில் தடவி மசாஜ் செய்யவும்.

🤲 வெள்ளரிக்காயை உங்கள் கைகளில் தடவி நன்றாக தேய்த்து, 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

🤲 தினமும் படுப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை கைகளில் தடவிக் கொள்ளுங்கள்.

Related posts

மருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை…!

user

ஆலம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா!

user

உங்கள் கூந்தலின் நுனி பிளவு பட்டு முடி வளருவது கடினமாக உள்ளதா? இதோ, சில டிப்ஸ்!.

user

Leave a Comment