sivarajkumar about jailer 2 movie
ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது குறித்து சிவராஜ் குமார் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது நெல்சன் திலீப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் கேமியோ ரோலில் சிவராஜ் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவரே அதைப்பற்றி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கப் போவதாகவும் எனது பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். படத்தில் நான் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…