Sivakarthikeyan's 'Doctor' release postponed
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படத்தை தேர்தலுக்கு பின் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…