KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ?

KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ?

பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவிருக்கும் படங்களின் தகவல்கள் பார்ப்போம்..

கேஜிஎஃப், சலார், காந்தாரா போன்ற மிகப்பெரிய படங்களை தயாரித்து மாபெரும் தயாரிப்பு நிறுவனமான உருவெடுத்துள்ள ஹோம்பல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தை கன்னட இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்குவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை இயக்கி பிரபலமானார் சந்தோஷ் ஆனந்த்ராம். இவர் ஏற்கனவே ஹோம்பல் பிலிம்ஸ் தயாரிப்பில் படங்களை இயக்கி இருக்கின்றார். மேலும் இன்ஸ்டாகிராமில் சிவகார்த்திகேயன் இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராமை பின்தொடர்வதால் இவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் கணிக்கின்றனர்.

தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ரஜினி படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் படத்தை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார்.

கேஜிஎஃப் ,காந்தாரா போன்ற படங்களை தயாரித்த ஹோம்பில் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்தால் அவரின் மார்க்கெட் மேலும் உயரும். அவரின் சம்பளமும் மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்தியளவில் அப்படத்திற்கு ரீச் கிடைக்கும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

Sivakarthikeyan to team up with KGF-Kandhara team? Do you know who the director is?
dinesh kumar

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

4 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

4 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

5 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

5 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

6 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

11 hours ago