தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மேனேஜராக பணியாற்றி வருகிறார் ஜெகதீஷ்.
தளபதி விஜய் கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு மேலும் ஒரு படத்தில் நடித்து விட்டு அரசியலில் இறங்க உள்ளார். இதன் காரணமாக விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் பட தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி சிவகார்த்திகேயன் மற்றும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிறுவனத்துடன் இணைந்து ஜெகதீஷூம் இப்படத்தை தயாரிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்த பிறகு இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…