Sivakarthikeyan in Kamal's production again?
மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்?
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘தலைவர்-173’ படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.
முன்னதாக, கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ‘அமரன்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்க ராஜ்கமல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனை ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளார். பிப்ரவரி 20-ந்தேதி வெளியாகவுள்ள படம் ‘தாய் கிழவி’. இதன் டீஸர், ராதிகாவின் லுக், காட்சியமைப்புகள் உள்ளிட்ட அனைத்துமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தினை சிவகார்த்திகேயன், பேஷன் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தை தொடர்ந்து சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோரது படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படங்களைத் தொடர்ந்து சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். விரைவில் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் இப்படம் ஒப்பந்தம் செய்யப்படும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…