Sivakarthikeyan confirms Tollywood entry
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற அக்டோபர் 9-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அன்றைய தினமே தெலுங்கிலும் இப்படம் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ரிலீசாகிறது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் பேசிய சிவகார்த்திகேயன், விரைவில் தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்காக தெலுங்கு கற்று வருவதாக தெரிவித்துள்ளார். அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…