Latest Tamil cinema News
மருத்துவம்

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் இயல்பாகச் சுரக்க வைக்க உதவும் சிறுகீரையை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

# சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால், பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.

# சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

# அடிக்கடி சிறுகீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து சமைத்து சாதத்தில் சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.

# சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட கண் புகைச்சல் குறையும்.

# சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.

# அருகம்புல் வேர், சிறுகீரை வேர், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி பால், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரச, பாசான மருந்துகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நஞ்சுகள் குறையும்.

Related posts

பயனுள்ள எளிமையான இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

user

பற்களின் கறை மறைந்து பற்கள் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா?

user

மூட்டுத் தேய்மானத்திற்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போமா?

user

Leave a Comment