தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி பாஸ்போர்ட் ஏஜென்சி கம்பெனிக்கு சென்று ஜீவா குறித்து விசாரிக்கின்றனர். ஆனால் அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் கொடுக்க முடியாது அதுதான் எங்களுடைய ரூல்ஸ் என அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
மனோஜ் அவங்க பாட்டி செத்துப் போயிட்டாங்க, தகவல் கொடுக்கணும் கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று சொல்ல அப்போதும் முடியாது நீங்க வேற வழியில் ட்ரை பண்ணி பாருங்க என்று சொல்ல வேறு வழி இன்றி இருவரும் கிளம்பி வருகின்றனர்.
மறுபக்கம் முத்துவின் காரில் ஜீவா வந்து கொண்டிருக்க முத்து எந்த நாட்டில் இருந்து மேடம் வரீங்க என்று கேட்க கனடா என சொல்கிறார். ஓ நீங்களும் கனடாவா என் வீட்லயும் ஒருத்தன் கனடா போறதுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் என்று முத்து சொல்கிறார். கனடா பத்தி முத்து பேசிக்கொண்டு வருகிறார். ஜீவா கனடாவில் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் இப்ப இங்க ஒரு ப்ராப்பர்ட்டி வாங்க போறேன் அதோட ரெஜிஸ்ட்ரேஷனுக்காக வந்ததாக சொல்கிறார்.
நான் சென்னையில இருக்கிற வரைக்கும் நீங்க தான் என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போகணும் என்று சொல்ல முத்து நீங்க போன் பண்ணுங்க மேடம் நான் வந்து சொல்கிறார். வீட்டில் விஜயா ரோகினி ரூம் கதவை தட்டி இரண்டு பேரும் ரெடி ஆகுங்க கோவிலுக்கு போகணும் என்று சொல்கிறார். கோவிலுக்கா எதுக்கு என்று கேட்க எல்லாம் ரோகினியோட அப்பா ஜெயிலில் இருந்து வெளியே வர பரிகாரம் செய்யத்தான் என்று சொல்கிறார்.
ரோகிணியை கூட்டிட்டு போயிட்டு அங்கபிரதர்ஷணம் செய்து உண்ணாவிரதம் இருந்து பரிகாரம் செய்யணும் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். 48 நாளைக்கு தனியா தான் படுக்கணும். நான்வெஜ் சாப்பிடக்கூடாது. ஒருவேளை மட்டும் தன் சாப்பிடணும் அதுவும் சூரிய உதயத்துக்கு முன்னாடியே சாப்பிடணும் என்று கண்டிஷன்களை அடுக்குகிறார்.
இதையெல்லாம் கேட்ட ரோகினி இந்த பரிகாரத்தை நீங்களே பண்ணிடுங்க என்று சொல்ல நான் எப்படி பண்ண முடியும் எங்க அப்பாவுக்காக நீ தான் பண்ணனும் என்று சொல்கிறார். ரோகிணி அதெல்லாம் எதுக்கு என்று கேட்க விஜயா உன் அப்பாவுக்காக நீ இதை கூட பண்ண மாட்டியா என்று கோபப்படுகிறார்.
பிறகு எல்லாரையும் கூப்பிட்டு கோவிலுக்கு போக போற விஷயத்தை சொல்ல மீனா விரதம்னா ரொம்ப கஷ்டமா கடுமையா இருக்குனு 48 நாள் ஒரு வேலை தான் சாப்பிடணும் தரையில் தான் படுக்கணும். விரதத்தை முழுசா முடிக்கணும் என்றெல்லாம் சொல்ல எதுக்கு இந்த விரதம் எல்லாம் என்று கேட்க விஜயா அப்படி நான் சொல்ல கூடாதுன்னு கடவுளுக்கு செய்யறது என்று கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து ரோகிணி எதுக்கு ஆண்ட்டி எல்லாருக்கும் கஷ்டம் என்று கேட்க ஸ்ருதி இதெல்லாம் கேட்கும் போதே தெரியுது எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்ல உங்களுக்கு தன் கஷ்டம் என்று சொல்கிறார். பிறகு முத்துவும் கோவிலுக்கு வரணும் வர சொல்லுங்க என்று விஜயா அண்ணாமலையிடம் சொல்கிறார். அண்ணாமலை மீனாவிடம் நான் வர சொன்னேன்னு சொல்லி என்று சொல்ல மீனா முத்துவிற்கு ஃபோன் போடுகிறார்.
இங்க முத்து என் வீட்டுல எங்க அண்ணனுக்கு என்னடா போனேன்னு சொல்லிட்டு இருக்கான் ஏற்கனவே அவனால 27 லட்சம் போச்சு என்று சொல்ல வர அந்த நேரத்தில் மீனா போன் செய்ய முத்து என்ன விஷயம் என்று கேட்க நீங்க உடனே பொன்னியம்மன் கோவிலுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார். என்ன விஷயம் என்று கேட்க வேண்டுதல் ஒன்று வச்சிருக்காங்க குடும்பத்தோட போய் பரிகாரம் பண்ணனும்னு சொல்றாங்க. முத்து நான் வரல என்று சொன்ன மாமா கிட்ட போன கொடுக்கிறேன் நீங்களே சொல்லுங்க என்று சொல்ல சரி வரேன் அஞ்சு நிமிஷம் தான் உடனே கிளம்பிடுவேன் இருக்கேன் என்று சொல்கிறார்.
இதை தொடர்ந்து முத்து ஜீவாவிடம் பர்மிஷன் கேட்க நான் சென்னையில் இருக்கிற வரைக்கும் என்னை நீங்க தான் கூட்டிட்டு போக போறீங்க உங்களுக்காக இந்த ஃபேவர் கூட பண்ண மாட்டேனா ஒரு பிரச்சனை இல்லை என்று சொல்ல இருவரும் கோவிலுக்கு வருகின்றனர். இங்கு கோவிலுக்கு வந்த விஜயா ரோகினியை கூட்டிட்டு போய் மஞ்ச சேலை கட்ட வைத்து தலையில் தண்ணீர் ஊற்றி விபூதியடித்து பரிகாரம் செய்ய தயாராகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…