sirakadikka-aasai serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியல் இன்றைய எபிசோட்டில் ரோகினி விஜயா பேசிய பேச்சால் இனிமே மனோஜ் என் பேச்சை கேட்கிற மாதிரி பண்ணனும் என்று சொல்ல வித்யா மனோஜ் கூட்டிட்டு தனி குடித்தனம் வந்துடு என்று கூறுகிறார்.
அடுத்ததாக அண்ணாமலையை அவமானப்படுத்தி அதன்மூலம் முத்துவை வம்புக்கு இழுக்க முடிவெடுத்து முத்துவை அண்ணாமலையும் சாப்பிட கூப்பிட்டு வந்து உட்கார வைக்கின்றனர். அண்ணாமலை அவமானப்படுவதை பார்க்க வாசுதேவனின் அவரது மனைவியும் டைனிங் ஹாலுக்கு வர முத்துவும் அண்ணாமலையும் சாப்பிடாமல் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.
குழந்தைங்க சாப்பிட வந்துட்டாங்க அதனால எழுந்து விட்டதாக சொல்ல வாசுதேவனின் மனைவி குழந்தைகளை எந்திரிக்க சொல்ல அண்ணாமலை முதல்ல அவங்க சாப்பிடட்டும் என்று சொல்லி விட பிளான் கொலாப்ஸ் ஆகிறது.
அதன் பிறகு சுருதி மற்றும் ரோகிணிக்கு ஆரத்தி எடுக்கின்றனர். ஸ்ரீ நகைகளை கழட்டி வைத்துவிட்டு மாலையை கழட்டி போட்டு ரவி மற்றும் தன்னுடைய பிரண்ட்ஸை கூட்டிக்கொண்டு வெளியே செல்கிறார். கழட்டி போட்ட மாலையில் செயின் ஒன்று சிக்கிக்கொண்டிருக்கிறது.
பார்வதி மீனாவை கூப்பிட்டு நீ போய் ஸ்ருதியை கூட்டிட்டு வா உன் மாமியார் எல்லாரும் ஒன்னா சேர்ந்து கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டு இருக்கா என்று சொன்னதன் மீனா சுருதியை கூப்பிட அவரது ரூமுக்கு வர அங்கே அவர் அழகி போட்ட மாலையில் செயின் மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அதை எடுத்து கொண்டிருக்க இதை பார்த்த வாசுதேவன் ஸ்ருதியோட செயினை திருடறியா என பழியை போடுகிறார்.
உடனே வாசுதேவன் தனது மனைவியை கூட்டிட்டு மீனா திருடுவதாக சொல்ல அவர் சேர்ந்து மீனாவை திருடி என அவமானப்படுத்துகிறார். விஜயாவையும் கூப்பிட்டு மீனா நகை திருடியதாக சொல்ல அவர் பதில் பேச முடியாமல் நிற்கிறார்.
பிறகு மீனா கண்ணீருடன் அங்கிருந்து ஓடி வந்து முத்துவை கட்டி பிடித்துக் கொள்ள என நடந்துச்சுன்னு கேட்க வாசுதேவனும் அவரது மனைவியும் வந்து மீனா நகை திருடியதாக சொல்ல அண்ணாமலை என் மருமக அப்படி பண்ற ஆள் கிடையாது என மீனாவுக்கு ஆதரவாக பேசுகிறார். முத்து நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க என்று பொறுமையாக பேச அவர்கள் மீனா திருடியத நாங்களே பார்த்தோம் என சொல்கின்றனர்.
FRIDAY - Trailer , Dheena , Anish Masilamani , Mime Gopi , Hari Venkatesh ,…
Galatta Family Trailer , Vimal , Anicka Vickram , Thambi Ramaiya , Mottai Rajendran ,A.Sarkunam…
Nellai Boys Trailer | White Screen Production | V.Raja | Arivazhagan , Hema Rajkumar |…
Dashamakan - Title UNLOCKED , Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael https://www.youtube.com/watch?v=0fs_1ampVWw…
Anjaan - Re-Release Trailer , Suriya, Samantha , Yuvan Shankar Raja , N. Lingusamy …
Akhanda 2 Thaandavam Trailer (TAMIL) | Nandamuri Balakrishna | Boyapati Sreenu | ThamanS | DEC…