கேள்வி மேல் கேள்வி கேட்ட குடும்பத்தினர்.விஜயா எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை உட்பட மனோஜ், முத்து மற்றும் ரவி என 4 பேரும் பைனான்சியரிடம் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு வீட்டிற்கு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்ததும் விஜயா திருதிருவென முழிக்க முத்து அவங்க அக்யூஸ்ட் கோர்ட்டுக்கு போகணும் என்று சொல்லி டைனிங் டேபிள் கொண்டு வந்து நிறுத்தி குற்றவாளி கூண்டு போல் மாற்றி அதற்குள் விஜயாவை நிற்க வைக்கிறார்.

அண்ணாமலையை நீதிபதியாக சேரில் உட்கார வைத்து 17 லட்சம் ரூபாய் பணம் எங்கே என கேட்க விஜயா முக்கியமான செலவு ஒன்று இருந்தது என்று சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய என்ன செலவு என எல்லோரும் துருவித் துருவி கேள்வி கேட்கின்றனர்.

விஜயா கல்யாண விஷயமா என்று சொல்ல மீனா கோவில்ல தானே கல்யாணம் நடந்தது. அதுக்கா 17 லட்சம் செலவாச்சு என்று கேள்வி கேட்க விஜயா முறைக்க அண்ணாமலை மீனா கேட்கிறது சரிதானே அதுக்கு அவ்வளவு செலவாகி இருக்காது என்று கூறுகிறார்.

ரவி நான் ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க அப்பா கிட்ட பணம் கேட்கக்கூடாது என்று லோனுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நீங்க 17 லட்சம் கல்யாணத்துக்காக வாங்கின மாதிரி தெரியல வேற ஏதோ பெருசா செலவு பண்ணி இருக்கீங்க என்று கேள்வி கேட்க பிறகு விஜயா வேறு வழியில்லாமல் ரோகினிக்கு பியூட்டி பார்லர் ஆரம்பிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பத்திரத்தை வைத்து பணம் வாங்கி கொடுத்ததாக உண்மையை போட்டு உடைக்கிறார்.

ஓ லிஸ்ட்ல இந்த பிராடும் இருக்கா என முத்து ரோகினியை விலாசி எடுக்கிறார். ஒரு கட்டத்தில் ரோகிணி கோவப்பட முத்து என்ன எங்க வீட்டு பணத்துல பியூட்டி பார்லர் ஆரம்பிச்சுட்டு சத்தம் போடுற என கேள்வி கேட்டு அடக்குகிறார். அண்ணாமலையும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்று ரோகிணியை கேட்க ரோகினி தலைகுனிந்து நிற்கிறார்.

மீனா ரோகிணியை பார்த்து சத்யா மீது பழி போட்ட விஷயமாக கேள்வி கேட்க விஜயா கோபப்பட அது என்ன அந்த பொண்ணுக்கு மட்டும் பணம் வாங்கி கொடுத்திருக்கீங்க மீனாவுக்கு கூட தான் கோயம்பேட்டில் பெருசா பூக்கடை வைக்கணும்னு ஆசை அவளுக்கு ஒரு பத்து லட்சத்துல பூக்கடை வச்சு கொடுங்க, எனக்கு ஒரு பத்து லட்சம் குடுங்க ரவிக்கு ஒரு பத்து லட்சம் குடுங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

முத்து கேட்ட கேள்விகளால் ஆவேசப்படும் விஜயா உங்களுக்கு ரோகிணி பத்தி தெரியல, அவளுக்கு இதெல்லாம் பிஸ்கட் சாப்பிடற மாதிரி என்று சொல்ல முத்து மீனாவிடம் பத்து லட்சத்துக்கு எல்லாம் பிஸ்கட் இருக்கா என்று கேட்கிறார். பிறகு இன்னும் ஒரே வாரத்தில் இந்த 17 லட்சம் ரூபாய் பணத்த கொடுக்கிறேன் அதுவும் ரோகிணியே கொடுப்பா என விஜயா சவால் விட ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 23-09-23
jothika lakshu

Recent Posts

காந்தாரா 2 படத்தின் ஏழு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

3 hours ago

தண்ணீர் பிடிக்க தவறிய போட்டியாளர்கள், பிக் பாஸ் போட்ட வீடியோ.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…

3 hours ago

முத்து சொன்ன வார்த்தை,விஜயா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…

4 hours ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, நந்தினி சொன்ன பதில் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

வாட்டர் மெலன் அகாடமி டாஸ்க்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

6 hours ago

மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

20 hours ago