முத்துக்கு வந்த சந்தேகம். பதற்றத்தில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் சேர்ந்து ஃபேமிலி போட்டோ எடுத்து முடித்த பிறகு மலேசியா மாமாவிடம் பேச தொடங்குகின்றனர்.

அவர் மனோஜிடம் அப்புறம் மாப்பிள்ளை வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று சொல்ல முத்து வேலை தேடுவது எல்லாம் எப்படி போயிட்டு இருக்குன்னு கேளுங்க மாமா என கோர்த்து விடுகிறார். அவனுக்குத்தான் வேலையே இல்லையே என்று சொல்ல என்ன மாப்ள உங்களுக்கு வேலை இல்லையா என்று கேட்க விஜயா அவன் நிறைய படித்திருக்கிறான் சம்மந்தி அதனால யாரும் வேலைக்காக மாற்றாங்க. இல்லன்னா அவளைத் தேடி ஆயிரம் வேலை வரும் என சொல்கிறார்.

மனோஜ் ஆமாமாம் நிறைய படித்து இருப்பதினால் என்னை வைத்து வேலை வாங்குற திறமை யாருக்கும் இல்லை என்று சொல்ல விஜயா அவன கைபிடித்து தூக்கி விட ஆள் இல்லை என கூறுகிறார். முத்து அவ என்ன கிணத்துக்குள்ளவா விழுந்து கிடக்கிறான் என கவுண்ட்டர் போடுகிறார்.

இதனை தொடர்ந்து எல்லோருக்கும் அத்தனை பாக்கு கொடுக்க மட்டன் பிரியாணி சாப்பிட்டு வெத்தலை போட்டா அது தனி சுகம் என்று மலேசியா மாமா சொல்கிறார். அதன் பிறகு மனோஜ் ரோகினியோட அப்பா கிட்ட சொல்லி ஒரு பிசினஸ் ஆரம்பிக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க என்று கேட்க அவர் அப்பா ஏகப்பட்ட பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு அவருக்கு இருக்கிறது ஒரே ஒரு வாரிசு ரோகினி தான். அவருக்குப் பிறகு எல்லாமே உங்களுக்குத்தானே என்று சொல்ல விஜயா சந்தோஷப்பட மனோஜ் இருந்தாலும் எனக்கு நீ புடிச்ச பிசினஸ் பண்ணனும் இல்ல என்று கேட்கிறார்.

அதுவும் சரிதான் மாப்பிள்ளை என்னோட பிரண்டு ஒருத்தன் ஆட்டுத்தோலை வச்சே பெரிய பிசினஸ் பண்ணி பெரியாளாகிட்டான் என்று சொல்ல இவர் என்ன எதைக் கேட்டாலும் ஆட்டையும் உதாரணமாக சொல்றது என அண்ணாமலைக்கும் நாச்சியார் பாட்டிக்கும் சந்தேகம் வருகிறது.

பிறகு ரோகினியோட அப்பாக்கு எப்பவுமே பணம் பணம் தான். வீட்டுக்கு வெளியே கூட ஒரு ஏடிஎம் மெஷின் வைத்திருக்கிறார் என்றால் பாருங்கள் என்று சொல்கிறார். பணம் பணம்னு ஓடி அவர் உறவுகள்னால கவனம் செலுத்தல ரோகினியோட அம்மா கேன்சர் வந்து செத்துப் போயிட்டாங்க. பக்கெட் பக்கெட்டா ரத்தம் வாங்கி எடுத்து செத்தாங்க. அவங்க இறந்து போன மூனே மாதத்துல ஒரு சின்ன பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அதனால தான் ரோகிணிக்கு அதனால ரொம்ப கோபம் என சொல்கிறார்.

உடனே விஜயா அவருக்கும் ஒரு துணை வேணும் இல்லையா என்று சொல்ல இப்ப நீங்களே செத்து போயிட்டீங்கன்னு வெச்சுக்கோங்க மூணு மாசத்துல சம்பந்தி வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா பசங்க அவரை மதிப்பார்களா? என்று விஜயாவுக்கு சங்கு ஊதி அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு முத்து எல்லோருக்கும் கரும்பு உடைத்து கொடுக்க மனோஜ் இந்த கரும்பு ஹாடா இருக்கு ஜூஸ் போட்டு விடலாமா என்று கேட்க மலேசியா மாமா என்ன மாப்ள இதையே கடிக்க முடியலனா நல்லி எலும்பு எல்லாம் எப்படி கடிப்பீங்க என கேட்கிறார்.

உள்ளே வீட்டுப் பெண்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க ஸ்ருதி ரோகிணியிடம் நீங்க ஓகே தானே என்று கேட்க ரோகிணி ஓகே என்று சொல்கிறார். மீனா நமக்கு பிடிச்சவங்க திடீர்னு நம்ம கூட இல்லன்னா ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் எனக்கு அந்த வலி தெரியும் என்று அப்பாவை பற்றி பேச விஜயா குறுக்கே புகுந்து உனக்கு அம்மாவா நான் இருப்பேன் என சொல்கிறார்.

நீ அம்மாவா இருப்பேன்னு சொன்னது சந்தோஷம் தான் ஆனா ரோகிணிக்கு மட்டும் தானா என்று நாச்சியார் பாட்டு கேட்க இல்ல அத்தை நான் சுருதிக்கும் சேர்த்து தான் சொன்னேன் என்று சொல்ல மீனாவ மறந்துட்டியா என்ன கேட்க விஜயா அவளுக்குத்தான் அம்மா இருக்காங்களே என்று சொல்கிறார். உடனே பாட்டி ஸ்ருதிக்கும் தான் அம்மா இருக்காங்க என்று சொல்ல அதானே எனக்கு ஒரு அம்மாவே போதும் நீங்க ஆன்ட்டியாவே இருங்க என ஷாக் கொடுக்கிறார்.

இங்கே முத்து வெளிய எங்கயாச்சும் போய்ட்டு வரலாம் என்று செல்வத்திடம் பேச மலேசியா மாமா எனக்கும் வீட்லயே இருக்கிறது போர் அடிக்குது கிராமத்தை சுற்றி பார்க்கலாம் என்று சொல்ல முத்து வாங்க மாமா நான் கூட்டிட்டு போறேன் என வாண்டட் ஆக வந்து சிக்கிய மலேசியா மாமாவை வெளியே அழைத்துச் செல்ல பிளான் போடுகிறார். ரோகிணி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியும் மலேசியா மாமா முத்துவுடன் கிளம்பிச் செல்ல ரோகினி மனோஜை கூட அனுப்பி வைக்கிறார்.

இவர்கள் எல்லோரும் ஒரு குளத்தின் அருகே செல்ல குளம் இறங்கி போச்சுன்னா ஊருக்குள்ள தண்ணி வந்துடும்ல போன வருஷம் எங்க வீட்லயும் தண்ணி வந்துடுச்சு என மலேசியா மாமா சொல்ல முத்து சென்னைல தான் தண்ணி வந்துச்சு மலேசியா வந்துச்சு என்று சொன்ன மலேசியாவுலயும் ஏறி பக்கத்துல தான் வீட்டை கட்டி வச்சிருக்காங்க அதனால தண்ணி வந்துடுச்சு என அளந்து விடுகிறார். செல்வம் அதெல்லாம் இருக்கட்டும் சரக்க கேள்வி என்ன முத்துவிடம் சொல்ல தம்பி என்ன கேட்கிறார் என்னை மலேசியா மாமா கேட்கிறார்.

முத்து இவன் என் பிரண்டு நீங்க மலேசியாவில் இருந்து வந்ததால் உங்கள பாக்கணும்னு ஆசைப்பட்டு வந்தான் என்று சொல்ல அப்படியா தம்பி பார்த்துக்கோங்க என்று முன்னும் பின்னுமாக திரும்பி உடம்பை காட்டுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai serial episode-update
jothika lakshu

Recent Posts

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

19 hours ago

Baasha Da Video Song

Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…

19 hours ago

Thangam Thangam Lyrical Video

Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel

19 hours ago

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

2 days ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

2 days ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

2 days ago