sirakadikka-aasai-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை .இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகினி என இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் ஒரு பெண்ணை காதலித்து ஏமாந்த கதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயம் விஜயா மனோஜ்க்கு போன் செய்ய போன் சுவிட்ச் ஆஃப் என வருகிறது. என் புள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல என விஜயா பிறந்த மனோஜ்க்கு புரை ஏற ரோகினி தலையில் தட்டி தண்ணீர் கொடுக்கிறார்.அதன் பிறகு முத்து வண்டியில் சென்று கொண்டிருக்க தனது அப்பாவின் நண்பரை பார்த்து பேச அவர் தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ள விஷயத்தை அப்பாவிடம் பணம் கேட்டேன் அவராலையும் கொடுக்க முடியாத விஷயத்தையும் சொல்லி கண்கலங்குகிறார்.
அதற்கு அடுத்ததாக விடியற்காலை 3 மணிக்கு விஜயா பார்வதிக்கு போன் செய்து மனோஜ் வீட்டுக்கு வரல எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல பார்வதி காலையில வரைக்கும் பார்க்கலாம் இல்லன்னா அவன் தங்கி இருந்த லாட்ஜ்க்கு போய் பார்க்கலாம் என சொல்கிறார்.
மறுநாள் காலையில் ரோகிணி வெளியே வர அப்போது நஸ் மனோஜை இன்னைக்கு டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என சொல்கிறார். மேலும் 12 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என சொல்ல சரி என சொல்லிவிட்டேன் ரோகிணி ரூமுக்கு வர மனோஜ் பாத்ரூம் எழுந்து சென்ற நேரத்தில் அவனது ஃபோனை ஆன் செய்ய விஜயா போன் செய்கிறார். அப்போது ரோகிணி மனோஜ் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தில் சொல்ல விஜயா உடனடியாக வருவதாக சொல்லி பார்வதியுடன் கிளம்பி வருகிறார்.
இங்கே ரோகினி மனோஜ் வந்ததும் உங்களுக்கு யாரும் இல்ல அனாதைனு சொன்னீங்க, அப்புறம் எப்படி அம்மா வந்தாங்க என கேட்க மனோஜ் அனாதை மாதிரி தான் சொன்னேன் என்று சொல்கிறார். நான் பொய் சொல்லனும்னு எதையும் சொல்லல நீங்க யாரும் இல்லன்னு சொன்னதுனால எனக்கு எல்லோரும் இருக்காங்கன்னு சொல்லி மனசு கஷ்டப்படுத்த வேண்டாமே சொல்லாம விட்டுட்டேன் என சொல்லி சமாளிக்கிறார்.
பிறகு பார்வதி மற்றும் விஜயா வந்துவிட விஜயா மனோஜை பார்த்து பதற பிறகு ரோகிணிக்கு நன்றி சொல்கிறார். அடுத்து ஹாஸ்பிடலுக்கு பணம் கட்ட விஜயா மற்றும் பார்வதி இருவரும் பணம் எடுத்து வராத நிலையில் மனோஜ் நீ கொடுத்த பணம் என்கிட்ட இருக்கு என சொல்லி பர்சை எடுத்துக் கொடுக்க விஜயா அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல ரோகிணி நான் கட்டி விட்டு வருகிறேன் என வெளியே வருகிறார்.
இந்த சமயம் முத்து யாருக்கோ பணம் கட்டுவதற்காக ஹாஸ்பிடல் வந்து லைனில் காத்துக் கொண்டிருக்க ரோகினி இடையில் வந்து பணம் கட்ட முயற்சி செய்ய முத்து எல்லாரும் லைன்ல இருக்கோம்ல போய் லைன்ல நில்லு என சண்டை போட்டு ரோகினியை லைனில் நிற்க வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…