விஜயா எடுத்த முடிவு. அதிர்ச்சியில் மீனா அம்மா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ்க்கு வேலை போன விஷயம் அறிந்த விஜயா அதிர்ச்சி அடைகிறார். உங்கள நம்பி கடன் வேற வாங்கி வச்சிருக்கேன், அந்த கந்து வட்டிக்காரன் வேற முத்துவுக்கு தெரிஞ்சவனா இருக்கான் எப்ப உண்மை தெரியும்னு தெரியல என பதறுகிறார்.

அடுத்ததாக விஜயா மனோஜிடம் இந்த விஷயம் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். ரோகிணிக்கு கூட சொல்லாத என்று சொல்கிறார். முதல்ல வேற வேலை ஏதாச்சு தேடிக்கோ அதுக்கப்புறம் நானே பக்குவமா ரோகிணி கிட்ட சொல்றேன் என திட்டம் போடுகிறார்.

இங்கே முத்து தூங்குவதை மீனா ரசித்து பார்த்துக் கொண்டிருக்க மறுபக்கம் வீட்டுக்கு வரும் ரோகிணி மனோஜ் தூங்கிக் கொண்டிருக்க எழுப்பி என்ன ஆச்சு ஒரு மாதிரி டல்லா இருக்க என்று கேட்க மனோஜ் ஆபீஸில் என வேலை போன விஷயத்தை சொல்ல வர விஜயா ஓடி வந்து வேறு காரணத்தை சொல்லி சமாளிக்கிறார்.

நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன், அந்த மீனா வேற இல்ல எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு என்று சொல்ல ரோகிணி நான் வேணும்னா போட்டு எடுத்துட்டு வரவா என்று கேட்க வேண்டாம் நீயே நாள் முழுக்க வேலை செஞ்சிட்டு டயர்டா வர நானே பார்த்துக்கொள்கிறேன் என்று விஜயா உள்ளே செல்கிறார்.

ரோகிணி விஜயாவை கூப்பிட்டு நான் ரொம்ப கொடுத்து வச்சவ, மத்த வீட்ல எல்லாம் வெளியில வேலைக்கு போனா கூட வீட்டு வேலையும் சேர்த்து செய்ய சொல்லுவாங்க ஆனா நீங்க அப்படி இல்லை என்று பாராட்டுகிறார்.

பிறகு அண்ணாமலை வீட்டுக்கு வர முத்துவுக்கு போன் போட்டு எங்க இருக்க சாப்டியா என்று விசாரிக்க மீனா வீட்டில் இருக்கும் விசயத்தையும் மீன் குழம்பு சாப்பிட்டதையும் சொல்ல இதைக்கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார். நைட்டு வந்துடுவியா சாப்பாடு ஏதாச்சு செய்யணுமா என்று கேட்க வேணாம்ப்பா எப்படியும் கலி ஏதாச்சும் தான் கிண்டி வைப்பாங்க நான் இங்கேயே சாப்பிட்டு விடுகிறேன், வருவேனா என்று தெரியவில்லை என்று சொல்ல சரி நீ பாத்துட்டு வா என்று போனை வைத்து விடுகிறார். ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டது என்று விஜயா டென்ஷன் ஆகிறார்.

அதைத் தொடர்ந்து முத்துவுக்கு சவாரி ஒன்று வந்து வேலைக்கு கிளம்ப மீனாவின் அம்மா சந்தோஷப்பட ரவுடிகள் நைட் நேரத்தில் மீனா வீட்டுக்குள் நுழைய பிளான் போடுகின்றனர். இதை அறிந்த முத்து சவாரியை செல்வத்துக்கு சொல்லிவிட்டு திரும்பவும் வீட்டுக்கு வர மீனாவின் அம்மா அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்ததாக அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து முத்துவிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்து மீனாவின் அம்மா டென்ஷன் ஆகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

11 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…

14 hours ago

தனி ஒருவன் 2 : அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…

14 hours ago

மதராசி : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

15 hours ago

விதவிதமாக டிராமா போடும் ரோகினி, மனோஜ்க்கு வந்த பிரச்சனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…

18 hours ago

நந்தினிக்காக அசிங்கப்படும் சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

19 hours ago