Latest Tamil cinema News
ஆன்மீகம்

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி தரும் சிறை காத்த அய்யனார் மகிமை, பற்றி தெரிந்து கொள்ளலாமா?

# சிவபெருமான், திருமால் ஆகியோரின் இரு பெரும் சக்தியின் அம்சமாக தோன்றியவர் அய்யனார்.

# முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவருக்கு, செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து மன்னர் தீர்ப்பு கூறினார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதற்கேற்ப விவசாயி, அய்யனாரை உள்ளம் உருக வழிபட்டார்.

# விவசாயிக்கு மரணதண்டணை நிறைவேற்றப்படும் நேரத்தில் ஒருவர், உண்மையான குற்றவாளியை மன்னர் முன் நிறுத்தி, விவசாயியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றினார்.

மனித வடிவில் உண்மையான குற்றவாளியை மன்னர் முன்பு நிறுத்தியவர் சாட்சாத் அய்யனார் தான் என்று அவரது பெருமையை பக்தர்கள் இன்றும் கூறி பரவசப்பட்டு கொள்கின்றனர்.

# நீதிமன்ற வழக்குகளில் வெற்றியை தேடி நீதி நிலைநாட்டி தரும் வல்லமை மிக்கவராக சிறைகாத்த அய்யனார் திகழ்கிறார்.

# எனவே நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வர வேண்டி பக்தர்கள் இங்கு வந்து அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு செல்கின்றனர்.

# தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்ரஹாரம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள ரவுண்டானா அருகில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம்.

Related posts

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் தலையில் பூ வைக்கலாமா? தெரிந்து கொள்வோமா!.

user

ஆடி மாதத்தில் நமக்கு அதிர்ஷ்டம் தரும் நாமம் எது தெரியுமா? அந்த நாமத்தை ஜெபித்து வளம் பெறலாம். வாருங்கள்!.

user

தத்து பிள்ளைகளுக்கும் ஜாதகம் எழுதலாமா? இந்த குழப்பத்தை தெரிந்து கொள்வோமா!.

user

Leave a Comment