siragadikkaasai serial episode update 15-10-25
அருண் சீதாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவின் அம்மா சந்திரா பூக்கடைக்கு ஆர்டர் எடுத்துக்கொண்டு போக நீ ஹாஸ்பிடல் போகலையா என்று கேட்கிறார் இல்லம்மா கொஞ்ச நேரம் ஆகும் என்று சொல்ல மாப்பிள்ளை போன் பண்ணாரா என்று கேட்கிறார் பன்னாரு நான் தான் எடுக்கல என்று சொல்ல ஏற்கனவே நீ வீட்டை விட்டு வந்தது தப்பு போன் எடுத்து எதற்கு பேசாம இருக்க என்று சொல்லிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் அருண் வீட்டுக்கு வருகிறார். சந்திரா வரவேற்று காபி கொடுக்க போக வேண்டா அத்தை என்று சொல்லுகிறார் மன்னிச்சிடுங்க மாப்பிள சீதா வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அத்தை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு அருண் சீதா இருவரும் பார்த்துக் கொண்டே இருக்க சந்திரா சரி நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் கடைக்கு கிளம்புறேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு ஒரு வழியாக அருண் சீதாவை சமாதானம் செய்துவிட சரி நான் காபி போடறேன் நீங்க போய் பிரஷப் ஆகுங்க கிளம்பலாம் என்று சொல்ல அருண் பாத்ரூமுக்கு செல்கிறார். உடனே முத்துமீனா வந்து சீதாவிடம் பேசுகின்றனர் எதுக்கு சீத்தா நீ வீட்டை விட்டு வெளியே வந்த அந்த ஆளுக்கு என் மேல தான் கோபம் உன் மேல எல்லாம் எதுவும் கிடையாது. கொஞ்சம் யார்கிட்டயாவது அவருக்கு சண்டை போடணும் கொஞ்சம் மெண்டல் மாதிரி என்றெல்லாம் அருணை பற்றிய முத்து சொல்லிக்கொண்டே இருக்க அருள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மேல் அருண் சீதா என குரல் கொடுக்க முத்து அமைதியாகி விடுகிறார் வேலைக்கு டைம் ஆயிருச்சு வா என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி செல்ல முத்து உன் புருஷன் வந்திருக்காரு சொல்ல மாட்டியா என்று கேட்க எங்க மாமா என்ன சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லுகிறார் சரி ஓகே அவருக்கு என் மேல தான் பிரச்சனை உன்னை நல்லா தானே பாத்துக்குற கிளம்பு நான் எடுத்துட்டு போய் விட்டுட்டு போறேன் என்று சொல்லுகிறார் மறுபக்கம் மனோஜ் ஷோரூம்க்கு ஒரு பெண்மணி குழந்தையை அழைத்து வர அந்தப் பையன் ஐஸ்கிரீம் வேணும் என அடம் பிடித்து கொண்டே வருகிறார். மனோஜ் போன் பேசிக்கொண்டு இருக்க இந்த குழந்தை அழுவது மனோஜ்க்கு டிஸ்டர்ப் ஆக இருக்கிறது. எதுக்குமா குழந்தை அழுதுகிட்டே இருக்கு என்று கேட்க ஏற்கனவே சாக்லேட் வாங்கி கொடுத்துட்டேன் சார் இப்போ ஐஸ்கிரீம் வேணுன்னு அடம் பிடிக்கிறான் ரெண்டு போட்டாதான் சரியாவா என்று சொல்லிவிட்டு குழந்தையின் கையை விட்டுவிட்டு அம்மா சென்று விடுகிறார்.
பிறகு அந்தக் குழந்தை சார் மேல் விளையாட மனோஜ் இறக்கி விடுகிறார் பிறகு மீண்டும் அந்த குழந்தை அடித்து விடுகிறார் உடனே அந்த குழந்தை அம்மா வந்து எதுக்காக இப்ப குழந்தை அடிச்சிங்க என்று கேட்கிறார் என அழுதுகிட்டே இருந்தா என்னால போன் பேச முடியல என்று சொல்லுகிறார் கொழந்தனா அப்படித்தான் இருக்கும் அதுக்காக அடிப்பீங்களா உங்களுக்கு குழந்தை பொறந்துச்சா என்று கேட்க இல்லை என்று சொல்லுகிறார் எப்படி பொறக்கும் என்று பேசிக் கொண்டிருக்க சந்தோஷ் எல்லாம் கவனிக்கிறார் பிறகு என்னம்மா இப்படி பேசுறீங்க என்று சொன்னார் உங்களுக்கெல்லாம் குழந்தையே பொறக்காது என அந்த பெண்மணி சாபம் விட்டுப் போக மனோஜ் வருத்தப்படுகிறார் உடனே சந்தோஷம் ஹாஸ்பிடலுக்கு போய் பேசலாம் என முடிவெடுக்க இருவரும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். அங்கு இருக்கும் டாக்டர் இவர்களை உட்கார வைக்க மனோஜ் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஆனா குழந்தை இல்ல என்று சொல்ல எல்லாமே எனக்கு தெரியும். மருந்து சாப்பிட்டாளா குழந்தை பிறக்காது அதுக்கு நீங்க நடக்கக்கூடாது குழந்தை மாதிரி தவழ்ந்து போகணும் அதுவும் இல்லாம ஃபீடிங் பாட்டில் தான் பால் குடிக்கணும் ஒரு பத்து நிமிஷம் குழந்தை மாதிரி நீங்க அழனும் என்று சொல்ல இந்த வயசுல இதெல்லாம் எப்படி பண்ண முடியும் என்று மனோஜ் கேட்கிறார்.
நீங்க எதுல தூங்குறீங்க என்று சொல்ல கட்டில்ல தான்னு சொல்லுகிறார் இப்போ ஒரு புடவை தொட்டில் கட்டி அதுல தான் தூங்கணும் என்று சொல்ல இதெல்லாம் எப்படி பண்ண முடியும் இதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லையே என்று சொல்ல இதெல்லாம் சைக்காலஜி டிரீட்மென்ட் நீ எதை நினைக்கிறாயோ அதையே ஆகிறாய் என்று நினைத்து இதெல்லாம் பண்ணனும்னு சொல்லுகிறார். எத்தனை நாளைக்கு இதை பண்ணனும் என்று கேட்க அஞ்சு நாள் பண்ணா போதும் என்று சொல்லுகிறார். மனோஜ் எவ்வளவு பீஸ் என்று கேட்க அதெல்லாம் நீ அப்பா ஆனவுடன் தானா எனக்கு கிரெடிட் ஆகும் என்று சொல்லிவிட மனோஜ் மற்றும் சந்தோஷ் இருவரும் சென்று விடுகின்றனர்.பிறகு தான் தெரிகிறது டாக்டராக இருந்தவர் ஒரு மெண்டல் என்று, அவரது மகன் தான் டாக்டர் ஆகவும் வருகிறார் இவர் எதுக்கு அப்பாவை இங்க உட்கார வச்சிருக்கீங்க ரூம்ல தான உட்கார சொன்னேன் யாராவது பேஷண்ட் வந்தாங்களா என்று கேட்க அந்தப் பெண் யாரும் வரவில்லை என சொல்லி விடுகிறார்..
மனோஜ் ஹாலில் புடவையில் தொட்டில் கட்டிக் கொண்டிருக்க ரோகிணி வருகிறார். ரோகினி என்ன கேட்கிறார்?அதற்கு மனோஜ் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…