நக்கலாக பேசிய மனோஜ், பதிலடி கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

முத்து செய்த செயலால் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் ஸ்வீட் கொடுத்து பிசினஸ்ல இன்னைக்கு நிறைய சேல்ஸ் ஆயிருக்கு என்று சொல்லுகின்றன. ஆனால் விஜயா குழந்தையை பற்றி பேசுகிறார். அந்த நேரம் பார்த்து மீனா விஜயாவுக்கு டீ எடுத்துக் கொண்டு வருகிறார்.

மீனாவுக்கு ஸ்வீட் கொடுத்துவிட்டு ரோகினி சொல்கிறார். விஜயா மீனாவை கூப்பிட்டு டீ கேட்டா காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து இருக்க என்று சொல்ல இல்ல அத்தை டீ தான் போட்டேன் என்று சொல்லுகிறார். நான் பொய் சொல்றனா என்று ரோகினி கூப்பிட்டு குடிக்க சொல்ல அவரும் காபி தான் என்று சொல்லுகிறார். பிறகு மீனாவை திட்டி விட்டு விஜயா சென்று விடுகிறார்.

உடனே ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் வந்து முத்து இப்படி ஒரு விஷயம் பண்ணத ஏன் அண்ணி சொல்லவே இல்ல என்று கேட்க அவர் என்ன பண்ணாரு என்று மீனா சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அண்ணாமலை மற்றும் விஜயா வருகின்றனர். முத்து அப்படி என்ன பண்ணா என்று அண்ணாமலை கேட்க உடனே மனோஜ் மற்றும் விஜயா நக்கலாக பேசுகிறார்கள்.

என்ன விஷயம் என்று ரவி ஆரம்பிக்க கழுத்தில் மாலையுடன், ஸ்வீட்டோடு entry கொடுக்கிறார் முத்து. பிறகு நடந்த விஷயங்களை சொல்ல ஆரம்பிக்க , பிரசவ வலியுடன் இருந்த ஒருவர் சவாரிக்கு வந்ததாகவும் அவருக்கு பாதியில் வலி அதிகமாகி விட்டதாகவும் மார்க்கெட்டில் காரை நிறுத்தி அவருக்கு தெரிந்தவர்கள் மூலமாக பிரசவம் பார்த்து நல்லபடியாக பெண் குழந்தை பிறந்ததாகவும் சொல்கிறார். அந்த குழந்தையை முதலில் என்னிடம் தான் கொடுத்தாங்க அப்படியே பூவ தூக்குற மாதிரி இருந்தது என்று சொல்லி கண்கலங்குகிறார் முத்து. விஜயா வெளியெல்லாம் நல்லது தான் நடக்குது இந்த வீட்ல தான் எந்த ஒரு குழந்தை சத்தமும் கேட்கல என்று சொல்லுகிறார்.

மீனா ரோகினி பார்த்து அதிர்ச்சியாகி நின்று கொண்டே இருக்க விஜயா முதல்ல மூத்த மருமகளா நீதா குழந்தை பெத்துக்கணும் என்று ரோகினியிடம் சொல்லிக் கொண்டிருக்க மீனா பாத்திரத்தை கீழே போட்டு விடுகிறார். என்னாச்சு என்று கேட்க அவளுக்கு வயித்தெரிச்சல் என்று விஜயா சொல்லுகிறார். பிறகு முத்து பதிலடி கொடுக்கிறார். மீனா நடந்த விஷயங்களை நினைத்து பூஜை அறையில் நின்று யோசித்துக் கொண்டிருக்கிறார். முத்து அவரைக் கூப்பிட்டு சோசியல் மீடியாவில் போடும் கமெண்ட்ஸ்களை படித்து காட்ட மீனா எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறார். என்னாச்சு என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லி கிச்சனுக்கு சென்று விடுகிறார்.

கிச்சனுக்கு வந்த ரோகினி முத்துவை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க மீனா ஆமா ,ஆமா,மட்டும் சொல்லுகிறார். இதனால் சுதி உங்களுக்கு என்ன ஆச்சு நீங்க இப்படி இருக்க மாட்டீங்களே முத்து ஏதாவது சண்டை போட்டாரா நான் போய் கேட்கிறேன் என்று கிளம்ப மீனா தடுத்து நிறுத்துகிறார்.

ஸ்ருதியிடம் மீனா உண்மையை சொன்னாரா? அதற்கு ஸ்ருதியின் ரியாக்ஷன் என்ன என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


SiragadikkaAasai Serial Today Episode Update
jothika lakshu

Recent Posts

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..!

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

11 minutes ago

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…

54 minutes ago

மதராசி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

4 hours ago

காந்தி கண்ணாடி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

4 hours ago

முத்து மீனா சொன்ன வார்த்தை,அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…

8 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, கண்ணீர் விட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago