விஜயா பேசிய பேச்சு, பதிலடி கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி சமையல் செய்து குடும்பத்தினரை அலற விட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆசிரமத்திற்கு துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க சுருதியும் துணிகளை தருகிறார். விஜயா நான் கட்டின புடவைய வேறு யாரும் கட்டக்கூடாது என்று சொல்ல உடனே ரோகினி அவருக்கு ஜால்ரா அடிக்கிறார் இதனை முத்து கிண்டல் அடிக்க உடனே விஜயா உன்னை யாராவது எனக்கு சப்போர்ட் பண்ணி பேச சொன்னாங்களா உன் வேலையை பாரு என்று ரோகினி இடம் சொல்ல, ரூமுக்கு சென்று விடுகிறார். மறுபக்கம் சிட்டி அவரது ஆட்களிடம் முத்து உடைய கார்ல பிரேக் உயர கட் பண்ணியாச்சு ஆனா ஆயில் முடியற வரைக்கும் பிரேக் பிடிக்கும் அதனால நீங்க என்ன பண்றீங்கன்னா அவங்க வீட்டாண்ட போய் நின்னு அவன் கெளம்பும்போது அவன் வண்டிய கொஞ்சம் உரசி விட்டா போதும் அவனை டென்ஷன் ஆகி பின்னாடி துரத்துவான் அவன் பாஸ்ட்டா வரும்போது சீக்கிரமா ஆயிள் காலி ஆகி பிரேக் பிடிக்காம ஒன்னு வேற யார் மேலயாவது மோதி ஜெயிலுக்கு போவான் இல்ல அவன் மோதி அவனுக்கு ஏதாவது ஆயிடும் எது நடந்தாலும் நம்மளுக்கு சந்தோசம் தான் என்று சொல்லி அனுப்புகிறார்.

மறுபக்கம் முத்து துணிகளை எடுத்துக் கொண்டு வந்து காரில் வைக்க மீனா பூக்களை எடுத்து வருகிறார். ரோகிணி மேலே நின்று சிட்டி காரில் என்ன பண்ணி இருப்பான் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். எதுக்கு மீனா பூ எடுத்துட்டு வர என்று கேட்க போற வழியில கொடுத்துடுங்க என்று சொல்லி வைக்கிறார் அந்த நேரம் பார்த்து செல்வம் போன் பண்ண மீனா உடன் பூ கட்டுபவர்கள் வீட்டுக்கு வந்து விடுகின்றனர் நான்தான் இவர்கிட்ட கொடுத்திருப்பேனே என்று சொல்ல பரவால்ல மீனா அண்ணா சவாரிக்கு போவார் இல்ல என்று சொல்லி அவர்கள் பூவை வாங்கிச் சென்று விடுகின்றனர்.உடனே மீனா அதுதான் டைம் இருக்குல்ல வாங்க சாப்பிட்டு போயிடுவிங்க என்று கூப்பிட செல்வத்திடம் சரி நான் சாப்பிட்டு வரேன்னு போனை வைக்கிறார்.

மீனா வீட்டுக்குள் வந்து நான் சமைக்கிறேன் என்று கிச்சனுக்கு போக சுருதி சமைத்துக் கொண்டிருக்கிறார் என்னங்க பண்றீங்க என்று கேட்க நாங்கள் ரெஸ்டாரன்ட் வைக்கப் போறோம் எனக்கும் சமைக்க தெரியும் இல்ல அதான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் என்று சொல்லி சொல்லுகிறார் என்ன சமைக்கிறிங்க என்று கேட்க சமைக்கிறதுல ஈஸியான ஃபுட் எது என்று பார்த்தால் உப்புமா தான் இருந்தது அதனால எல்லாத்துலயும் சர்ச் பண்ணி செஞ்சிருக்கேன் சரி வாங்க நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லல ஸ்ருதி வேண்டாம் என அனுப்பி விடுகிறார். உடனே முத்து சமச்சிட்டியா என்று கேட்க இல்ல வேற ஒருத்தர் சமைக்கிறாங்க இன்னைக்கு என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து ரவி வர வேற யாருன்னா யாரு என்று கேட்க ஸ்ருதி என சொல்லுகிறார் அவளுக்கு சுடுதண்ணி போடத் தெரியாது என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரியலையே என்று வந்து கேட்க உப்புமா செய்வதாக சொல்லுகிறார் சரி நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்ல அவரையும் வேண்டாம் என சொல்லி விடுகிறார். பிறகு சமைத்து விட்டு அனைவரையும் சாப்பிட கூப்பிடுகிறார்.

ஸ்ருதி உப்புமாவை எடுத்து பரிமாற ரொம்ப இறுக்கமாக மாறி இருப்பதால் எடுத்து அனைவரும் தட்டுலிலும் போட்டு அடித்து அடித்து வைக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் பதறுகின்றனர் ஒரு வாய் எடுத்து வைத்து விட்டு எல்லோரும் அமைதியாக இருக்க முத்து மீனாவிடம் கேட்கிறார் அவர்கள் நல்லா தான் இருக்கு என்று சொல்ல அண்ணாமலையிடம் கேட்க வித்யாசமா இருக்கு என்று சொல்லுகிறார் உடனே மனோஜ் இதுதான் நீங்க ரெஸ்டாரன்ட்ல செய்யப் போறீங்களா செஞ்சா ஒரே நாள்ல மூடிற வேண்டியதுதான் அதுக்கு தான் வேலை செய்வதற்கு ஒரு ஆள் இருக்காங்க இல்ல சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல முத்து கோபப்படுகிறார். உடனே அண்ணாமலை அவர்களை சமாதானப்படுத்த, ஒருத்தவங்க புதுசா சமைக்கரான அவங்களை குறை சொல்லக்கூடாது முதல்ல அதுல இருக்குற நல்ல விஷயத்தை சொல்லிட்டு அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னு சொல்லணும் என்று சொல்ல சூப்பர் அங்கிள் நீங்க தான் என்ன மோட்டிவேஷன் பண்றீங்க என்று ஸ்ருதி சொல்கிறார்.

அப்போ எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றீங்க நாளைக்கு நானே சமைக்கிறேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர் அதற்கு ரவி உடனே சுருதிக்கு ஒரு வாய் ஊட்டி விட என்ன டேஸ்டே இல்லை என்று சொல்லுகிறார். மீனா உங்களுக்கு நான் சொல்லித் தரேன் என்று சொல்ல நாளிலிருந்து உங்ககிட்ட நான் சமையல் கத்துக்குறேன் என்று சொல்லுகிறார் விஜயா சமையல மட்டும் கத்துக்க வேற எதையோ கத்துக்காத அவ திமிரு புடிச்சவ என்று சொல்ல இன்னொருத்தி அதிகமா போய் சொல்லுவா அவ கிட்ட அதை கத்துக்காத என்று சொல்லுகிறார்.

பிறகு வெளியில் சைக்கிளில் ஒரு நபர் முட்டைகளை அடுக்கி எடுத்துக் கொண்டு வர எதிரில் வந்த டூவீலர் மோதுவது போல் வர அவர் சைக்கிள் முத்துவின் கார் மீது மோதி முட்டைகள் உடைந்து விழுகிறது. பிறகு அவர் என்ன செய்கிறார்? முத்துவின் பதில் என்ன? மீனா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

28 minutes ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

30 minutes ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

1 hour ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

2 hours ago

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

20 hours ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

20 hours ago