siragadikkaaasai serial episode update 30-09-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம் இதுதான் உன்னோட மாமியார் போய் கால்ல விழுந்து ஆசீர்வாத வாங்கிக்கோ என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் உடனே என்ன முத்து உளறிக்கிட்டு இருக்கீங்க என்ற ரோகிணி கோவப்பட உன் புருஷன் பண்ண தப்புதான் திருத்திக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். உடனே மீனாவிடம் நீ போயிட்டு பூஜை ரூமில் இருந்து மஞ்சள் கிழங்கு வச்சு தாலி ரெடி பண்ணி எடுத்துட்டு வா என்று சொல்ல எண்ணங்க நீங்க பேசிகிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார் மீனா சொல்றது செய்யணும் என்று சொல்லிக் கொண்டிருக்க பிறகு ராணியிடம் முதல்ல அந்த தாலிய கழட்டி அவங்க கிட்ட குடும்மா இவன் தானே உங்க கற்ப சூறையாடி இருக்கான் உனக்காக நியாயம் கிடைக்கணும்னு தான் நான் பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்ல உடனே ராஜா கோபப்படுகிறார் நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க அவ என்னோட பொண்டாட்டி என்று சொல்ல முத்து கன்னத்தில் அறைகிறார் இப்பதான் உனக்கு பொண்டாட்டின்னு தெரியுதா என்று கேட்கிறார்.
எந்த விஷயத்துல பொய் சொல்லணும்னு தெரியாதா என்று கோபப்படுகிறார் உடனே அவர்கள் உண்மையை ஒத்துக் கொள்கின்றனர் மனோஜ் சாருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நாங்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கணும்னு தான் வேலைக்கு சேர்ந்தோம் ஆனா எங்க மேல 3 லட்சம் திருடுனதா திருட்டுப்பழி போட்டாங்க அந்த கோபத்துல தான் நாங்க இப்படி பண்ணோம் என்று சொல்லுகின்றனர்.பிறகு முத்து அவர்கள் இடம் பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டு வீடியோவையும் டெலிட் செய்து விடுகிறார் பிறகு அண்ணாமலை உங்க மேல தப்பு இல்ல நான் என்றாலும் நிரூபிக்கணும் அதுக்காக இன்னொரு தப்பை பண்ண கூடாது என்று அட்வைஸ் கொடுக்க அவர்களும் கிளம்பி விடுகின்றனர். உடனே குடும்பத்தில் இருப்பவர்கள் முத்துவில் செயலை பாராட்டுகின்றனர். இது மட்டும் இல்லாம அவங்க திருட்டுப்பழி போட்டதால தான் இது மாதிரி பண்ணி இருக்காங்க இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க அந்த பணத்தை அவங்க எடுக்கல என்று முத்து உறுதியாக சொல்லுகிறார் அப்ப அவங்க எடுக்கலைன்னா பணம் எங்க போயிருக்கும் என்று கேட்க அந்த லாக்கருடன் நம்பர் இவங்க ரெண்டு பேருக்கு தான் தெரியும் ஒன் இவ எடுத்திருக்கணும் இல்ல பார்லர் அம்மா எடுத்து இருக்கணும் என்று முத்து சொல்லுகிறார்.
விஜயா இவ எடுத்திருக்க மாட்டான் அவ ஒண்ணா எடுத்திருப்பா என்று சொல்ல கூடிய சீக்கிரம் அந்த உண்மையும் தெரியவரும் என்று முத்து சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு ரூமுக்கு வந்த மனோஜ் சந்தோஷமாக இன்னைக்கு நான் ரொம்ப ஜாலியா இருக்கேன் மைண்டு ஃப்ரீயா இருக்கு எங்கேயாவது வெளியே சாப்பிட போகலாம் என்று கூப்பிட ரோகிணி வேண்டாம் என சொல்லுகிறார். நல்ல வேளை முத்து காப்பாத்திட்டான் என்று சொல்லவும் அசிங்கப்படுத்தி தான் காப்பாற்றி இருக்கான் என்று சொல்லுகிறார். சரி அந்த பண விஷயம் பற்றி உடனே மனோஜ் பேசுகிறார் அப்போ அவங்க பணத்தை எடுக்கலைன்னா பணம் எங்க போயிருக்கும் என்று யோசிக்க ரோகிணி ஒன்றும் தெரியாதது போல் நீ எதுக்குயா மனோஜ் என்று கேட்க உன் மேல சத்தியமான எடுக்கல ரோகினி என்று சொல்லுகிறார் அந்த ராஜா ராணி ஒன்னு நல்லவங்க கிடையாது அவங்க எடுக்கலைன்னு சொன்னா அதை நம்ம நம்பிட்டனுமா என்று மீண்டும் அவர்கள் மேலேயே பழி போடுவது போல பேசுகிறார். விடு மனோஜ் அந்த பணம் போனதை விட உன் மேல பழியில்லாமல் இருக்கிறதா எனக்கு நிம்மதியா இருக்கு என்று சொன்ன மனோஜ் கொஞ்ச நேரம் யோசிக்கிறார். என்ன யோசிக்கிறேன் என்று கேட்க நீ ஏதாவது தெரியாம எடுத்து செலவு பண்ணிட்டியா ரோகினி மறந்துட்டியா என்று கேட்க என் மேல சந்தேகப்படுறியா என்று ரோகினி கேட்கிறார் அப்படிலாம் இல்ல ரோகினி சரி நீ எடுத்திருக்க மாட்டேன் அதான் முத்து அதுவே ஒரு நாள் யாருக்கு எடுத்தாங்கன்னு தெரிய வரும் என்று சொன்னாலே அவனை கண்டுபிடிப்பான் என்று சொல்லிவிட்டு மனோஜ் சென்று விடுகிறார் ரோகிணியும் நம்மதான் எடுத்தோம் முத்து கண்டுபிடிச்சிடுவானா என்று யோசனையில் உட்காருகிறார்.
மறுபக்கம் மீனா முத்துவிடம் நீங்க எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்கீங்க உங்க அண்ணன் ஒரு வார்த்தை கூட தேங்க்ஸ் சொல்லல என்று சொல்ல அவன் தேங்க்ஸ் சொல்லுவான் என்று எல்லாம் இதை சொல்லல இந்த வீட்ல அசிங்கப்பட வேணாம். அப்பாவுக்கு எந்த கெட்ட பேரும் வந்துரக்கூடாதுன்றதுனால தான் இப்படி பண்ணேன் என்று சொல்லுகிறார். அவர் சொல்ல நாளும் இந்த ரோகிணையாவது சொல்லி இருக்கலாம் அவங்களும் இப்படியே பண்றாங்க என்று சொல்ல என்கூட பிறந்தவனே சொல்ல விருப்பம் இல்லாதப்போ பார்லர் அம்மா மட்டும் எப்படி சொல்லும் என்று சொல்லுகிறார். உடனே மீனா இது மட்டும் இல்லாம கிரிஷோட அம்மா எப்படி உங்கள ரவுடி என்று சொல்லலாம் எனக்கு அது இன்னும் கோபம் அதிகமாக்கிக்கிட்டே இருக்கு கண்டிப்பா நான் அவங்க அம்மாகிட்ட பேசியே தீருவேன் போன் நம்பர் வாங்கி பேசுவேன் என்று சொல்ல எதுக்கு வினா தேவை இல்லாததெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று பேசிக் கொண்டிருக்க முருகன் போன் போட்டு பத்திரிக்கை ரெடி ஆயிடுச்சுங்க சாமிகிட்ட வச்சுட்டு முதல் பத்திரிக்கை உங்களுக்கு தான் கொடுக்க முடிவு பண்ணி இருக்கனுங்க கோவிலுக்கு வந்துட்டீங்களா என்று கூப்பிடுகிறார்.
சரி முருகா வந்துவிடுகிறோம் என முத்துவும், மீனாவும் கிளம்பி வர மறுப்பக்கம் முருகன் வித்யா இருவரும் கோவிலுக்கு வந்து பத்திரிக்கை வைத்து அர்ச்சனை செய்ய கொடுக்க இவர்கள் வந்து விடுகின்றனர் பிறகு அவர்கள் கையாலையே வாங்க சொல்ல முத்துவும் மீனாவும் வாங்கி கொடுக்கின்றனர். பிறகு நான்கு பேரும் என்ன பேசிக் கொள்கின்றனர்? மீனா வித்யாவிடம் என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…
Pagal Kanavu Official Teaser | Faisal Raj | Krishnanthu | Athira Santhosh | Shakeela |…
Aaryan Trailer Tamil | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…