SiragadikkaAasai Serial Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் மாப்பிள்ளை வேணான்னு சொல்லிட்டாரு என்று சொல்ல சீதா சந்தோஷப்படுகிறார். இது சந்தோஷப்படுற விஷயமா சீதா என்று சொல்ல நம் முதலிலிருந்து வேணான்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க தான் சம்மதிக்கல என்று சொல்ல இருந்தாலும் நீ சொல்றதும் சரிதான் சீதா சத்யாவால இவ்வளவு பிரச்சனை வந்தபோது எங்க வீட்ல ஒருத்தர் கூட என்ன நம்பல ஆனா என் வீட்டுக்காரர் மட்டும்தான் என் கூட இருந்து சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு ஏதாவது ஒரு பிரச்சனைனா விட்டுட்டு போற புருஷன் உனக்கு தேவை இல்லை என்று சொல்லி போனை வைக்கிறார்.
பிறகு முத்து கார் மீது லோன் வாங்கி இரண்டு லட்சம் ரெடி பண்ண,செல்வம் என்னால் முடிந்தது என்று 25 ஆயிரம் கையில் கொடுக்கிறார். முத்து மீனாவிற்கு ஃபோன் போட, மீனா அம்மாவுடன் தான் பூ கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல கோவில் ஆண்ட நானே வரேன் என்று சொல்லுகிறார். ஆனால் அங்கே மீனாவின் அப்பாவோட கரும்பு ஜூஸ் மெஷினை 7000 ரூபாய்க்கு விற்க அந்த நேரம் பார்த்து முத்து வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறார். ஒன்னு இல்ல மாப்ள நீங்க மட்டும் எவ்ளோ கஷ்டப்பட்டு காசு சேர்ப்பீங்க அதனால தான் இதை வித்தோம் என்று சொல்ல இது அவரோட ஞாபகமா நீங்க வச்சுக்கிட்டு இருக்கீங்க எதுக்கு விக்கிறீங்க நான் அந்த 7000 தரேன் என்று அவர்களிடம் சொல்லி அதை மெஷினை இறக்கி வைக்க சொல்லுகிறார். பிறகு சந்திரா நான் ஒரு ஒன்றரை லட்சம் ரெடி பண்ணி வச்சிருக்கேன் மாப்ள என்று கொடுக்க மொத்தம் மூன்று லட்சத்து 68,000 ரெடி பண்ணி இருக்கிறார் முத்து. மீதியை எப்படியாவது ரெடி பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு மீனாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.
பிறகு வீட்டில் உட்கார்ந்து ரூம் கட்ட சேர்த்து வைத்த பணத்தை என்ன அதில் 65 ஆயிரம் இருக்கிறது. மீனா வண்டியை வித்திடலாமா என்று கேட்க முத்து திட்டுகிறார். வேணும்னா இந்த கட்டில் வித்திடலாம் என்று சொல்ல உடனே மீனா முத்துவை கட்டிப்பிடித்து அழ வேண்டாம் இந்த கட்டிலை எவ்வளவு ஆசையா வாகனீங்கன்னு எனக்கு தெரியும். அதனால இதை விக்க வேண்டாம் என்று சொல்லி முத்துவின் மீது சாய்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து அண்ணாமலை கூப்பிடுகிறார் தூங்கிட்டு இருந்தீங்களா என்று கேட்க இல்ல பேசிகிட்டு இருந்தோம் மாமா என்று சொல்லுகிறார் பிறகு என்னால முடிஞ்சது இன்னும் 35 ஆயிரம் என்று சொல்லிக் கொடுக்க, மீனா ரொம்ப நன்றி மாமா என்று சொல்லுகிறார்.
மறுநாள் வக்கீல் இடம் முத்துவும் மீனாவும் இதுல நாலு லட்சத்து 65 ஆயிரம் இருக்கு இப்போதைக்கு இத வச்சுக்கோங்க சார் கண்டிப்பா மீதி பணம் திருப்பி கொடுத்துவிடுவேன் கேச மட்டும் எப்படியாவது முடிச்சு குடுங்க என்று சொல்ல கண்டிப்பா முடிச்சிடலாம் என்று சொல்லுகிறார். இதுக்கு மேல ஈஸி தான் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விஜயாவை போய் சந்திக்கிறார்.
விஜயாவும் வக்கீலும் என்ன பேசிக் கொள்கிறார்கள்? விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…