SiragadikkaAasai Serial Episode Update 18-04-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலை இடம் பணம் பற்றி பேச ஆரம்பிக்க விஜயா உடனே அவன் என்ன கேட்க வரான்னு புரியலையா இந்த வீட்டோட பத்திரத்தை மேல இன்னும் காசு அதிகமாக வாங்கி கொடுக்க சொல்றான் என சொல்ல மனோஜ் கரெக்டா சொன்னீங்கமா வேற எதுக்காக பேசியிருப்பான் என்று பேசிக்கொண்டே போகின்றனர் உடனே முத்து பேசி முடிச்சிட்டீங்களா நான் என்ன பேச வரனே தெரியாம நீங்களா ஒன்னு பேசி முடிச்சிட்டீங்களா என்று கேட்கிறார். உடனே சுருதி நீங்க அவசர கொடுக்கணும்னு அன்னைக்கே சொன்னேன்ல கரெக்டா தான் இருக்கு எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு தேவையில்லாம பேசி மொக்கை வாங்குறீங்க என்று கேட்கிறார்.
உடனே மீனாவைப் பார்த்து விஜயா நீ தான் சொந்த கால நிப்பேன் சொல்லி பேசுவ இல்ல இப்ப எதுக்கு காசு கேக்குற என்று சொல்ல, அத்தை நாங்க காசுக்காக பேசுறது உண்மைதான் ஆனால் அது உங்க வீட்டோட பத்திரத்தை வைத்து எல்லாம் வேண்டாம் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலையிடம் பாட்டி கிட்ட கேட்கலாம்னு இருக்கேன்பா என்று சொல்ல சந்தோஷம் முத்து அவங்களும் உனக்கு எதுவுமே செய்யலன்னு சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க கண்டிப்பா செய்வாங்க இதை ஏன் என்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார் இல்லபா உன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் கரெக்ட்டா இருக்கும் என்று சொல்ல, அண்ணாமலை விஜயாவிடம் எங்க அம்மா கிட்ட காசு வாங்க என்கிட்ட பர்மிஷன் கேட்கிறான் அவனை பத்தி நீ இவ்வளவுதான் புரிஞ்சி வச்சிருக்கியா என்று பேசிவிட்டு சென்று விடுகிறார்.
பிறகு அனைவரும் சென்றுவிட மீனா பாட்டியிடம் கேட்க வேண்டாம் என சொல்லுகிறாள். அவங்களே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க அதுவும் கையில இல்லனா திடீர்னு யார்கிட்டியாவது வாங்கி கூட கொடுப்பாங்க நம்ம அந்த கஷ்டத்தை பாட்டிக்கு கொடுக்க வேண்டாம் ஏற்கனவே எனக்கு ஒரு பைனான்சியர் எப்ப காசு வேணும்னாலும் தரேன்னு சொல்லி இருக்காரு நான் அவர்கிட்ட போய் பேசி பார்க்கிறேன் என்று சொல்ல முத்து சரி போய் பேசி பாரு முடியலன்னா இந்த மாதிரி ரெடி பண்ணிக்கலாம் என்று சொல்லி சென்று விடுகிறார். மறுபக்கம் விஜயா பார்வதி வீட்டுக்கு வர பார்வதி கேசரி கொடுக்கிறார் எதுக்கு விஜயா கேசரி கேட்ட என்று சொன்ன சந்தோஷமான விஷயம் இருந்தால் ஸ்வீட் சாப்பிடணும் போல இருக்கும்ல அதனாலதான் நின்று சொல்ல என்ன சந்தோஷமான விஷயம் என்று கேட்கிறார் உடனே சிந்தாமணி வந்துருவாங்க வந்தவுடன் உனக்கே புரியும் என்று சொல்ல உடனே சிந்தாமணியும் வந்துவிடுகிறார். என்ன மாஸ்டர் டான்ஸ் கிளாஸ் ரெண்டு நாள் லீவு சொன்னீங்க அதுக்குள்ள வர சொல்லிட்டீங்க என்று கேட்க நான் அதுக்காக வர சொல்லல என்று சொல்லுகிறார்.
மீனா ஒரு ஆர்டர் எடுப்பதற்காக பணம் கேட்டா எங்க வீட்டு பத்திரத்து மேல பணம் கேட்கலாம் முதல்ல ஆரம்பிச்சா நான் சொன்னதுக்கு அப்புறம் உடனே மாற்றி பேசினாங்க அதனால அவளுக்கு பணம் கிடைக்காது அந்த ஆர்டரும் கிடைக்காது என்று சொன்னால் சிந்தாமணி சந்தோஷப்படுகிறார் வேற வழியிலே ஏதாவது கிடைக்குமா என்று சிந்தாமணி கேட்க என் மாமியார் தான் கொடுக்கணும் ரெண்டு லட்சத்தை ரெண்டு நாள் கொடுக்க முடியாது அதனால கண்டிப்பா அவளுக்கு ஆர்டர் கிடைக்காது என்று சந்தோஷமாக ஸ்வீட் சாப்பிடுகின்றனர். மறுபக்கம் மீனா பைனான்சியரை சந்தித்து விஷயத்தை சொல்லி பணம் கேட்க கொடுக்க மறுக்கிறார்.
உங்கள நம்பி வந்தா திடீர்னு சொல்றீங்களா என்று சொல்ல ரெண்டு லட்சம் முன்பனமா கொடுத்து உனக்கு ஆர்டர் கிடைக்கலன்னா என்ன பண்றதுமா என்று சொல்லி கொடுக்க முடியாது என சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே அங்கிருந்த நபர் நீங்க எதுக்கு இதைவிட அதிகமான அமௌன்ட் எல்லாம் கொடுத்து இருக்கீங்க இந்த பொண்ணுக்கு ஏன் கொடுக்கல என்று சொல்ல சிந்தாமணிக்கு எதிரா அந்த பொண்ணு வேலை செய்யுது அவ ஆர்டர் பிடிக்க என்ன வேணாலும் பண்ணுவா அது இந்த பொண்ணுக்கு தான் நல்லதுக்கு இல்ல என்று சொல்ல ஆனால் உங்களையே நம்பி வந்தது அந்த பொண்ணு என்று சொல்ல அதற்கு அந்த பொண்ணுக்கு எப்போதும் செய்யனும்னு எனக்கு தெரியும் என்று அவர் சொல்லுகிறார். முத்து மீனாவுக்கு போன் போட அவர் என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…