ஆறு வருடம் கழித்து வந்த விஜயா,முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை போய் பார்க்கலாமா என்று விஜயா ஜோசியரிடம் கேட்க போய் பாத்துட்டு இருந்தா உங்க கூடவே வச்சிருந்திருக்கலாமே பார்க்க கூடாது என சொல்லி விடுகிறார் உடனே அவன் மட்டும் என்ன பாக்காம இருந்தா பரவாயில்லையா என்று கேட்க ஜோசியர் சரி அவன் உங்கள பாக்க கூடாது என்று சொல்ல விஜயா முத்துவை மறைந்திருந்து பார்க்கிறார் அப்போது கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க ஒரு பையன் இன்னொரு பையனை அடித்து விடுகிறார் அந்த பையன் அழுது கொண்டே வர முத்து என்ன ஆச்சு என்று கேட்க அவன் என்னை அடிச்சிட்டான் என்று சொல்லுகிறார் உடனே சின்ன பையனாக இருக்கும் முத்து அவனை அறைந்து நியாயம் கேட்கிறார் விஜயா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

உடனே முத்துவின் பாட்டிக்கு போன் போட்டு நாம பார்க்க வந்தேன். ஆனால் அது அவனுக்கு தெரியாது ஒரு பையன அடிச்சிட்டான் என்று சொல்ல நானும் அதை பத்தி விசாரிச்சேன் முத்து மேல் எந்த தப்பும் இல்லை அவன் தான் தப்பு பண்ணி இருக்கான் அதை தட்டி கேட்டு இருக்கான் அவ்வளவுதான் என பாட்டி சொல்லுகிறார் அவங்க இங்க இருக்கும்போது இப்படி இல்லையே என்று சொல்ல அப்போ நான் தப்பா வளக்கறேன்னு சொல்றியா என்று கோபப்பட அப்படி எல்லாம் சொல்லல அத்தை என்று சொல்லுகிறார். மறுபக்கம் மனோஜ் அம்மாவின் பாசத்தோடு வளர படிக்க முத்து ஊரில் ஜாலியாக விளையாடிக் கொண்டு பாட்டி வீட்டில் இருக்கிறார் அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அவரவர் அம்மா வந்து அழைத்துச் சென்று விடுகின்றனர் ஆனால் முத்துவை மட்டும் கூப்பிட யாரும் வராததால் வருத்தப்படுகிறார். முத்து வீட்டில் ஊஞ்சலில் படித்துக் கொண்டிருக்க அண்ணாமலை வந்து பார்க்கிறார்.

இதேபோல் சென்று கொண்டிருக்க ஒரு நாள் முத்து விஜயாவுக்கு போன் போடுகிறார் அண்ணாமலை போனை எடுக்க எப்படி இருக்கீங்க அப்பா நல்லா இருக்கீங்களா என்று கேட்டுவிட்டு அம்மா கிட்ட பேசணும் போன் போடுங்க என்று சொல்ல விஜயா மனோஜ்க்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முத்து போன் பண்ணி இருக்கிறான் என தெரிந்தவுடன் விஜயா சந்தோஷமாக பேசப் போக மனோஜ் தடுத்து எனக்கு சொல்லிக் கொடுங்க அப்புறம் பேசுங்க என்று கட்டாயப்படுத்துகிறார் இதனால் முத்துவிடம் பேச முடியாமல் சென்று விடுகிறது பிறகு ஆறு வருடங்கள் கழிந்து விட, விஜயாவும் அண்ணாமலை மனோஜென மூவரும் பாட்டி வீட்டுக்கு வந்து முத்துவை அழைத்துச் செல்ல வருகின்றனர். வெளியிலிருந்து வீட்டுக்கு வந்த முத்து அண்ணாமலையே பார்த்து சந்தோஷப்பட,விஜயாவை பார்த்து அமைதியாக இருக்கிறார் உடனே விஜயா கூட்டிக்கொண்டு போகும் விஷயத்தை சொல்ல முத்து நான் வரமாட்டேன் நான் பாட்டி கிட்ட தான் இருப்பேன் என சொல்லுகிறார் இந்த ஆறு வருஷத்துல நீங்க ஒரு வாட்டி கூட என்ன வந்து பாக்கல உங்க முகமே எனக்கு மறந்து போச்சு என்ன பாக்க எதுக்கு வராம இருந்தீங்க என்று கேட்கிறார்.

உடனே அண்ணாமலை நீ அங்க வந்தேனா உன்னையும் மனோஜ் ஸ்கூல்ல சேர்த்து விட்டு விடுவேன் நீ அங்க நல்லா படிப்ப என்று சொல்ல இங்க மட்டும் என்ன நான் எங்கேயும் நல்லா தான் படிக்கிறேன் பாட்டியை விட்டு வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க விஜயா ஒரு கட்டத்திற்கு மேல் வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். பிறகு வீட்டுக்கு வந்து முத்து என்ன சொல்லுகிறார்?அதற்கு விஜயா என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

15 hours ago

இறுதி வரை பரபரப்பான ஒரு திரில்லர் திரைப்படம்

2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…

16 hours ago

லோகா : 19 நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த துல்கர் சல்மான்.!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…

20 hours ago

இட்லி கடை படத்தின் கதை குறித்து வெளியான தகவல்..!

இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…

21 hours ago

மதராசி : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

21 hours ago

விஜி கேட்ட கேள்வி, சூர்யா செய்த செயல், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…

22 hours ago