ரோகினி சொன்ன வார்த்தை, அண்ணாமலை கேட்ட கேள்வி இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டி ரோகினி சொல்லி தான் இப்படி செஞ்சோம் என்று சொல்லுகிறார். உடனே முத்துவை வெளியில் வரவைத்துவிட்டு இவர்களை ஜெயிலுக்குள் அழைக்கின்றனர் பிறகு போலீஸ்காரர்கள் மீனாவிடம் உங்க வீட்டு ஆளு தனமா சொன்ன நீ போய் அவங்கள பேசி கூட்டிட்டு வா அதுக்குள்ள முத்து கிட்ட பேசிட்டு அனுப்பி வெச்சிடுவோம் என சொல்லி உட்கார வைத்துவிட்டு மீனாவை அனுப்ப மீனா கோபமாக வீட்டுக்குள் வந்து ரோகிணியிடம் கதவைத் தட்டி வெளியே வா என்று கூப்பிடுகிறார் குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர்.

உடனே எதுக்கு மீனா அப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க எல்லா வேலையும் நீங்க பண்ணிட்டு என் புருஷன் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும் போது அமைதியா நிக்கிறீங்க என்று கோபமாக பேசுகிறார். உடனே மனோஜ் என் பொண்டாட்டி என்ன பண்ணா அவன் பண்ண தப்பு மறைக்கிறதுக்கு என் பொண்டாட்டி மேல பழி போடாத என்று சொல்ல வாய மூடுங்க அவர் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும்போது என் மனசுல எவ்வளவு வலியும் பயமும் இருந்தது என்று எனக்கு தான் தெரியும் அப்ப கூட ஒரு வார்த்தை வாய தொறந்து சொல்லல என்று சொல்லுகிறார். தீபன் வீட்ல ஆள வச்சு அடிச்சது என் புருஷன் கிடையாது என்று சொல்ல ரவி என்ன நடந்தது அண்ணி என்று கேட்கிறார். அந்த சிட்டி தான் அடிச்சிருக்கான் இந்த ரோகினி தான் ரெடி பண்ணி அடிக்க சொல்லி இருக்காங்க என்று சொல்ல ரோகிணி எதுக்கு மீனா உளறிக்கிட்டு இருக்கீங்க எனக்கு அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லுகிறார்.

பொய் பேசுவ என்று தெரியும் அதுக்குன்னு இப்படி எல்லாம் பேசுவீங்களா என்று கோபப்பட மனோஜ் மீண்டும் ரோகினிக்கு ஆதரவாக பேசுகிறார். ஏதாச்சும் உளறிக்கிட்டு இருக்காதீங்க மீனா எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏதாவது ப்ரூப் இருக்கா என்று கேட்க ப்ரூஃப் தானே இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க என்று சொல்லி அமைதியாக நிற்க போலீஸ் வந்து ரோகிணி யாரென்று கேட்கின்றனர். மனோஜ் என்னோட வைஃப் தான் என்று சொல்ல இவங்கதான் சிட்டி கிட்ட சொல்லி தீபன் குடும்பத்தை அடிக்க சொல்லி இருக்காங்க என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.

நான் அடிக்க சொன்னேனா என்று சொல்ல அப்போ நீ அந்த ரவுடி கிட்ட பேசிகிட்டு இருக்கியா என்று விஜயா கோபப்படுகிறார். உடனே அண்ணாமலை நீ இந்த வீட்ல நிறைய தப்பு பண்ணி இருக்க அதெல்லாம் மன்னிச்சு உன்னை ஏத்துக்கிட்டு இருந்தோம் இப்போ கற்பூர அடைச்சு சத்தியம் செஞ்சோம் இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கியா என்று சத்தம் போட்டு பேசுகிறார். ஆனால் ரோகினி நான் அடிக்க சொல்லல பேச தான் சொல்லுவேன் என சொல்ல நீ எதுக்கு அவன் கிட்ட எல்லாம் பேசிகிட்டு இருக்க என்று மனோஜ் கேட்கிறார். விஜயா உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சி தான் நடக்குதா என்று கேட்க எனக்கு எதுவுமே தெரியாதுமா என்று சொல்ல இவ இன்னும் பொய் சொல்லிட்டு தான் இருக்கா என்று விஜய் சொல்லுகிறார்.

ரோகினி உடனே ஆன்டி என்கிட்ட பத்து லட்ச ரூபா பணம் கேட்டாங்க அது எப்படி என்னால ரெடி பண்ணி கொடுக்க முடியுமா அதனால பேசி சமாதானப்படுத்த முடியுதான்னு பேச சொன்னேன் அவ்வளவுதான் என்று சொல்ல உன் நியாயமெல்லாம் இருக்கட்டும் முத்து அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும் போது எதுக்கு வாய மூடிட்டு இருந்த என்று அண்ணாமலை கேட்டவுடன் ரோகிணி அமைதியாக நிற்க போலீஸ்காரர்கள் நீங்களே பேசிகிட்டு இருந்தா நாங்க எப்ப கூட்டிட்டு போறது என்று ரோகினி கூப்பிட நான் வரமாட்டேன் என்று சொல்லுகிறார். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக இருக்க மனோஜ் என்று கூப்பிட்டு போவத தானே சொல்லு என்று சொல்ல அனைவரும் அமைதியாக இருக்கின்றனர்.பிறகு ரோகினியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் வந்து ரோகினியை விசாரிக்க ரோகினி என்ன சொல்லுகிறார்?அதற்கு இன்ஸ்பெக்டர் பதில் என்ன? முத்து மீனா என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

SiragadikkaAasai Serial Episode Update 02-08-25
jothika lakshu

Recent Posts

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

5 hours ago

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

7 hours ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

13 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

14 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

14 hours ago