வீட்டுக்கு வந்த மீனா.. மனோஜ்க்கு பிஏ கொடுத்த ஐடியா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா சமாதானமாக மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பூஜையில் கலந்து கொண்டது முத்துவுக்கு சந்தோஷமாக இருக்கிறது அவர் சமாதானமாக விட மீனாவை விளக்கேற்ற சொல்லுகிறார் மீனாவும் விளக்கேற்றி பூஜை செய்ய முத்து சந்தோஷமாக இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் பூஜை தட்டிலிருந்து குங்குமம் தெரியாமல் முத்து மீது கொட்டி விட உடனே மீனா ஓடி வந்து அவரை புடவையில் துடைக்க போக உடனே பக்கத்தில் இருப்பவர்கள் சாமியே சரணம் என்று சொல்ல உடனே முத்துவின் துண்டில் துடைத்து விடுகிறார். நீ வந்தது ரொம்ப சந்தோஷம் நீ வீட்டுக்கு வந்தினா நான் இன்னும் சந்தோஷப்படுவேன் ரொம்ப சாரி மீனா என்று சொல்ல நீங்க இப்ப மாலை போட்டு இருக்கீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு பூஜையை ஆரம்பிக்கின்றனர்.

மறுபக்கம் சுருதி ஹோட்டலில் நீத்து அனுப்பிய ஆட்கள் சாப்பிட்டு விட்டு வேண்டுமென்றே சாப்பாடு நல்லா இல்லை என்று வீடியோ எடுத்து போடுகின்றனர் இதனை கவனிக்கும் சுருதி அவர் ஹோட்டலில் இருக்கும் ஒரு ஆளை வைத்து வீடியோ எடுக்க சொல்லுகிறார். உடனே அவர்களிடம் சென்று நீங்க நீத்து ஓட ஆளுங்க தானே எனக்கு தெரியும் கொஞ்ச நாள் முன்னாடி அவங்க ஹோட்டல்ல சாப்பிட்டு சூப்பரா இருக்குன்னு சொன்னீங்க என்று சொல்ல அதற்கு அவர்கள் நாங்க youtuber ஜனியூனான ரிவ்யூ தான் சொல்லுவோம் என்று சொல்ல அப்படியா என்று சொல்லி அந்த வீடியோவை காட்டுகின்றனர் உடனே இருவரும் மன்னிப்பு கேட்க இது மாதிரி வேற எங்கேயாவது பண்ணீங்கன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

மறுபக்கம் நீத்து அனுப்பின ஆட்கள் என்ன பண்ணிட்டு இருப்பாங்க என்று யோசித்துக் கொண்டிருக்க ஸ்ருதி போன் போடுகிறார். நீ பல விஷயம் எல்லாமே எனக்கு தெரிஞ்சிருச்சு இதுக்கு மேல இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காத இந்த விஷயம் ரவிக்கு தெரிஞ்சா அவனை என்னுடன் ரெஸ்டாரண்டுக்கு வந்துடுவான் என்று சொல்லிவிட்டு வார்னிங் கொடுத்து போனை வைக்க நீத்து கடுப்பாகிறார். உடனே ரவி வந்து கேட்க ஒன்னும் இல்ல ஃபேமிலி பிராப்ளம் என சொல்லி சமாளித்து விடுகிறார். மீனா வீட்டுக்குள் வந்துவிட அண்ணாமலை அவரை வரவேற்கிறார் உடனே விஜயா நீ எதுக்கு வந்த என கோபமாக பேச ஆரம்பிக்க உடனே இவ வந்தா தான் நல்ல சாப்பாடு கிடைக்கும் இன்னும் ரெண்டு நாள் இந்த ரோகிணி கையால சமைச்சா சாக வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டு சரி சரி வந்துட்டேன் உள்ள போ என்று அமைதியாகி விடுகிறார். உடனே மனோஜ் ரோகினி வெளியில் வர மனோஜ் நல்லவேளை இதுக்கப்புறம் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று சொல்லுகிறார்.

அதேபோல் ரவி சுருதி என அனைவரும் அந்த மீனாவின் சாப்பாட்டை மிஸ் பண்ணுவதாக பேசுகின்றனர் விஜயா உடனே வந்தவுடனே டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு அவளே இப்பதான் வந்திருக்கா ஏற்கனவே டைம் ஆயிடுச்சு போய் சமைக்கட்டும் என்று சொல்ல அண்ணாமலை இத்தனை நாளா எப்படி சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன் என்று சொன்ன இருக்கிறது தான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன் ஆனா சொல்லுகிறார் இன்னைக்கு ஒருநாளும் அதே மாதிரியே சாப்பிடு என்று அண்ணாமலை சொல்லுகிறார். உடனே மீனா விடம் நீ இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கமா ரோகினியே சமைக்கட்டும் என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அலறுகின்றனர்.உடனே மீனா நானே சமைக்கிறேன் என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் மனோஜ் மற்றும் ரோகிணி அவரது நண்பர் மூவரும் ஆஃபீஸில் இருக்க மனோஜ் பிஏ வருகிறார் லேட்டாக வந்தது ஏன் என கேட்க லேட்டா வந்தாலும் நான் ஒரு ஐடியா கூட வந்து இருக்கேன் என்று சொல்லுகிறார். பிஏ ஜீவா என்ன சொல்லுகிறார்? அதற்கு மனோஜ் ரோகிணி பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial episode update 29-11-25
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

15 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

15 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

15 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

15 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

15 hours ago

பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்..!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…

18 hours ago