Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துவிடம் கடுமையாக நடந்து கொள்ளும் விஜயா.. சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குப் போக காரணம் என்ன… வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

siragadikka asai serial promo update

முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முத்து சிறார் ஜெயிலுக்கு ஏன் போனார் என்ன நடந்தது என்று பரபரப்பான கதைக்களத்துடன் தற்போது சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

விஜயா ஜோசியரிடம் சென்று கேட்கும் போது ஜோசியர் உங்களுடைய இரண்டாவது பையனை பிரிஞ்சு நீங்க ஆறு வருஷம் இருக்கணும் என்று சொன்னதால் விஜயா முத்துவை அவரது பாட்டி வீட்டில் வருகிறார். அம்மாவை பிரியும் வருத்தத்தில் இருக்கும் முத்து சில காலங்கள் கடந்ததும் பாட்டி வீட்டில் வளர பழகிக் கொள்கிறார்.

ஆறு வருடம் முடிந்து மீண்டும் விஜயா வந்து முத்துவை அழைக்க முத்து நான் வரமாட்டேன் பாட்டி வீட்டிலேயே இருக்கேன்னு சொல்ல வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர் பிறகு சாப்பாடு பரிமாற விஜயா மனோஜ்க்கு மட்டும் சாப்பாடு பரிமாறி விட்டு நீயே போட்டுக்கோ என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் இதனால் கோபமான முத்து மனோஜ் தட்டை எடுத்து போட்டு உடைக்க விஜயா கோபப்பட்டு அடித்து விடுகிறார் உடனே அழுது கொண்டே முத்து பாட்டிக்கு போன் பண்ணி நான் அங்கேயே இருக்க பாட்டி என கூட்டிட்டு போய்டுங்க என்று சொல்லி அழுகிறார்.பிறகு கொஞ்ச நேரத்தில் போலீஸ்காரர்கள் வந்து முத்துவை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்துப் போவதாக சொல்லிவிடுகின்றனர் உடனே அண்ணாமலை வேண்டாம் என தடுக்க முத்துவும் என்ன அனுப்பாதீங்கப்பா என்று கெஞ்சுகிறார் ஆனால் விஜயா போகட்டும் விடுங்க என்று சொல்ல முத்து அதிர்ச்சி அடைகிறார்.

முத்து எந்த காரணத்திற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார் என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial promo update