சத்யாவை சந்தித்த முத்து, ரோகினி செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா இடத்திலிருந்து வீட்டு வேலைகளையும் ரோகினி செய்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் சத்யா வருகிறார் எப்ப வந்தகா எப்படி இருக்க என்ன விஷயம் என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் பிறகு கிச்சனுக்கு சென்று சந்திராவிடம் விசாரிக்க அவர் பேக் எடுத்துட்டு வந்து இருக்கா என்ன பிரச்சனைன்னு சொல்ல மாற்ற அதையும் மீறி கேட்டா வீட்டை விட்டு வெளியே போயிறேன்னு சொல்றா அதனால நான் எதுவும் கேட்கல என்று சொல்லுகிறார் வெளியில் வந்த சத்தியா மீனாவிடம் என்னாச்சுகா மாமா கிட்ட ஏதாவது சண்டை போட்டுட்டியா என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் உடனே சந்திரா ஏண்டி இப்படி மறைக்கிற என்று கேட்க என்னம்மா சொன்ன என்று கேட்கிறார் ஏன் மறைக்கிற என்று கேட்டேன் என்று சொல்ல உடனே மீனா சந்திராவை கட்டிப்பிடித்து அழுகிறார் சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம் போய் தூங்கு எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம் எல்லாமே சரியாயிடும் என்று சொல்லிவிட்டு மீனாவை படுக்க வைக்கிறார் பிறகு சத்யாவிடம் அவளை சொல்லுவா கொஞ்ச நாள் அமைதியா விட்டுருவோம் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ரோகினி வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை வந்தவுடன் நீங்க உட்காருங்க நான் காபி எடுத்துட்டு வரேன் என்று சொல்லி போகிறார் அதே போல் சுருதியும் ரவியும் வர கிச்சனில் மீனா இருக்கும் ஞாபகத்தில் ஸ்ருதி மீனா எனக்கு ஒரு காபி என்று சொல்ல ரவி அண்ணி வீட்ல இல்லையே என்று சொல்லுகிறார் ஆமா மறந்துட்டேன் என்று சொல்ல ரோகிணி காபி எடுத்துக் கொண்டு வந்து அண்ணாமலை இடம் கொடுப்பதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர் உடனே உங்களுக்கும் காபி போடவா என்று ரோகினி கேட்க உடனே ஸ்ருதி வேண்டாம் என்று சொல்லுகிறார் ரவி இப்பதான காபி கேட்ட அதுக்காண்டி என்ன என்று கேட்க அவங்க காபி எப்படி போடுவாங்கன்னு உனக்கு தெரியாதா அங்கிள் முகத்தை பாரு என்று சொல்ல ஒரு வாய் வைத்தவுடன் அண்ணாமலையின் முகம் மாறுவதை அனைவரும் கவனிக்கின்றனர் உடனே ரவியும் வேண்டாம் என சொல்லிவிடுகிறார். உங்க ரெண்டு பேருக்கும் டிஃபன் என்ன வேணும் என்று கேட்க நான் பிரட் ஆம்லெட் போட்டுகிறேன் என்று ஸ்ருதி சொல்லுகிறார் உடனே ரவியிடம் கேட்க நீங்க என்ன செஞ்சாலும் ஓகே என்று சொல்லி விடுகிறார்.

கிச்சனுக்கு சென்ற ரோகிணி தட்டு தடுமாறி சமைக்க கையில் சூடு எல்லாம் வைத்துக் கொள்கிறார். இந்த மீனா எப்படி தான் சமைக்கிறாங்களோ தெரியல என்று புலம்பிக் கொண்டிருக்க பிறகு வீடு பெருக்கும்போது முத்து வருகிறார். குடும்பத்தினரிடம் கைதட்டி கொண்டே வர என்னாச்சு என்று கேட்கின்றனர் மீனா ஒரே அந்த வீட்டு பக்கமே வராத மாதிரி பண்றாங்களா என்று கேட்கிறார் எதுக்குடா அப்படி சொல்ற என்று கேட்க மீனா இல்லாத குறைய தெரியாம இருந்தா தானே அவளை யாரும் கேட்க மாட்டாங்க அதனால தான் பார்லர் நம்ம வேலை பார்த்துகிட்டு இருக்கான் என்று கேட்க ஸ்ருதியும் இதுவும் கரெக்டா தான் இருக்கு அவங்க இதுக்கு முன்னாடி கூட வீட்டை விட்டு போய் இருக்காங்க ஆனா இவங்க இந்த மாதிரி வீட்டு வேலை செய்யல இப்ப மட்டும் ஏன் செய்யணும் என்று சொல்ல ரோகிணி என நம்ம மனசுல இருக்குற திட்டத்தை அப்படியே கண்டுபிடிக்கிறான் என்று நினைக்கிறார். உடனே அண்ணாமலை இடம் வீட்ல இருக்கிற வேலையை அப்ப யார் அங்கிள் செய்ய முடியும் எல்லாரும் வெளியே போகணும் வேலைக்கு போகணும் ஏதாவது செஞ்சத நான் அதனாலதான் அப்படி செஞ்ச என் மனசுல எந்த திட்டமும் இல்லை என்று சொல்லுகிறார் உடனே இது மாதிரி எல்லாம் பேசாதே என்று மனோஜ் சொல்ல அண்ணாமலை சாப்பிட்டு போ என்று சொல்லுகிறார் வேணாம்ப்பா இன்னைக்கு என்ன என் பொண்டாட்டிய இப்படி பேசாதன்னு சொல்லுவா நாளைக்கு என் பொண்டாட்டி செஞ்ச சாப்பாடு சாப்பிடாதன்னு சொல்லுவான் எனக்கு வேணாம் இன்னும் சவாரி இருக்கு வெளிய பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு போக பிறகு வாசலில் அவ இத்தனை நாளா என்கிட்ட சண்டை போட்டு இருக்கா ஆனா வீட்ட விட்டு போனதில்லை இன்னைக்கு காரணமே இல்லாம சண்டைக்கு வீட்டை விட்டு விட்டு போயிருக்கா இதுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு தெரியல கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் சத்யா வேலை பார்த்துக் கொண்டிருக்க சிந்தாமணி மகள் அவரிடம் பேச வருகிறார். ஏதோ அப்செட்டில் நோட்டு கிரிக்கிட்டு இருக்கீங்க என்ன ஆச்சு என்று கேட்க கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கு என்று சொல்லுகிறார் உங்க பர்சனல் விஷயத்த சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா என்கிட்ட ஷேர் பண்ணுங்க எனக்கு தெரிந்த சொல்யூஷன் தரேன் என்று சொல்ல சத்தியா அவரது குடும்பத்தையும் அவர்களது அக்காக்களையும் பற்றி சொல்லிவிட்டு மீனா வீட்டுக்கு வந்து இருக்கும் விஷயத்தை சொல்லுகிறார் இப்ப இருக்கிற நிலைமையில் அவங்க கிட்ட நீங்க எதுவுமே கேட்காதீங்க அவங்கள மனச மாத்தி கொஞ்சம் ஜாலியா இருக்க வைங்க அவங்களே சொல்லிடுவாங்க என்று சொல்ல நீங்க சொல்றதும் சரிதான் என்று சொல்லிவிட்டு பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து போன் பண்ணி இருக்கிறார்.

முத்து சத்யாவிடம் என்ன பேசுகிறார்கள்?அதற்கு சத்யா பதில் என்ன ?பார்வதி வீட்டில் மீனாவுக்கு என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

அரசன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. வெளியான அதிரடி அறிவிப்பு.!!

அரசன் படத்தில் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர்…

4 hours ago

மாஸ்க் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்…

4 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

ஸ்கூல் டாஸ்கில் கலக்கப்போகும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

7 hours ago

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

21 hours ago

Rebel Saab (Tamil) Lyrical Video

Rebel Saab (Tamil) Lyrical Video , The Raja Saab ,Prabhas , Maruthi , Thaman S…

1 day ago