siragadikka asai serial episode update 16-01-25
பல்வலி போல் ரோகினி நாடகமாட, ஸ்ருதி பல்லை புடங்க வைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனில் அப்பளம் பொரித்துக் கொண்டே இருக்க அங்கு வந்த முத்து திடீர்னு பல்வலி எப்படி வந்து இருக்கும் என்று மீனாவிடம் கேட்கிறார். அது என்ன சொல்லிட்டா வரும் எனக்கு எப்படி தெரியும் என்று மீனா கேட்க பல்லு வலி நான் முதல்ல அந்த இடத்தில் கூசும் அதுக்கப்புறம் கொஞ்சம் வலி தெரியும் அதுக்கு அப்புறம் தான் அதிகமாக்கும் ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு தான் வலி அதிகமாகும் ஆனால் திடீர்னு பார்லர் அம்மாக்கு எப்படி வலி அதிகமாச்சு என்று கேட்க உடனே மீனா ஆமாங்க நானும் கவனிச்சேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிச்சன்ல நான் தேங்காய் வெச்சி இருந்தா ரோகினி வந்து தேங்காயை எடுத்து வேக வேகமா சாப்பிட்டாங்க என்று சொல்ல அப்போ பல்லு வலி இருந்தா எப்படி சாப்பிட முடியும் என்று மீனா கேட்க மலேசியாவில் இருந்து வந்தவங்க கிட்ட எதுவும் பேசக்கூடாது என்பதற்காக நாடகம் ஆடி இருக்கு என்று முத்து சொல்லுகிறார்.
உடனே மீனா அதுதான் சுருதி போயிருக்காங்களா அவங்க தனியா போய் இருந்தா பரவால்ல என்று சொல்ல அதுக்காக தான் நானும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் மறுபக்கம் ரோகினியை ஹாஸ்பிடலுக்கு கூட்டி வந்த ஸ்ருதி இன்னொரு வாட்டி பார்த்துக்கலாம் வாங்க போகலாம் என்று வற்புறுத்தி கூப்பிடுகிறார் ஆனால் சுருதி அதெல்லாம் வேணாம் இருங்க வெயிட் பண்ணி பாத்துட்டு போகலாம் என்று சொல்லி டாக்டரிடம் அளித்து செல்கிறார்.
ரோகினி நமக்கு தான் எந்த பிரச்சனையுமே இல்லையே டாக்டர் கண்டுபிடிச்சிடுவார்களோ என்ற பயத்துடன் காட்ட டாக்டர் சொத்த பல்லு இருப்பதாக சொல்கின்றனர். உடனே பல்லு எடுக்கலைன்னா எல்லா பல்லுக்கும் பரவிடும் என்று சொல்ல இப்ப வேன டாக்டர் ஒரு ரெண்டு மூணு நாள் போகட்டும் நான் வந்து எடுத்துக்கிறேன் என்று ரோகினி சொல்லுகிறார். ஆனால் ஸ்ருதி அதெல்லாம் வேணாம் இப்பவே எடுத்துருங்க அப்புறம் மீதி பல்லுக்கு பரவிருச்சு நான் எல்லா பல்லும் எடுக்கிற மாதிரி ஆகிடும் என்று ரோகினி வற்புறுத்தி உட்கார வைத்து ஊசி போட்டு பல்லை புடுங்கி விடுகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு சமையல் சூப்பராக இருந்ததாக பாராட்டி விட்டுக் கிளம்ப விஜயா கொஞ்ச நேரம் இருங்க என்னோட மருமகள் வந்துருவா என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் வர அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் விஜயா. அவர்கள் போன கொஞ்ச நேரத்தில் சுருதி ரோகினையும் வர என்னாச்சு என்று கேட்கின்றனர் பல்ல புடுங்கியாச்சு என்று சொல்ல நான் அப்புறம் புடுங்கிக்கிறேன் என்று தான் சொல்ல சுருதி தான் இப்பவே புடுங்கன்னு சொல்லி புடுங்கிட்டாங்க என்று சொல்ல முத்துவும் மீனாவும் சிரிக்கின்றனர். என்ன ரோகினி என்கிட்ட நீ பல்லு வலின்னு சொல்லவே இல்ல என்று மனோஜ் கேட்க வழி என சொல்லிட்டா வரும் என்று பேசி சமாளிக்கிறார்.
பிறகு ஸ்ருதி எல்லோருக்கும் ஐஸ்கிரீம் கொடுக்க அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்று விடுகின்றனர். கிச்சனுக்கு வந்த முத்துவும் மீனாவும் திடீர்னு பல்லு வலி எப்படி வந்துச்சு என்று யோசிக்க மீனா போகும்போது பல்லு வலி இருந்துச்சா இல்லையான்னு தெரியாது ஆனால் வரப்போ கண்டிப்பா இருந்திருக்கும் என்று சொல்லுகிறார்.
முத்து ஊர்க்கார பாத்தா எவ்வளவு பாசமா என்ன நடந்துச்சு, எல்லாரும் இருக்காங்க,எப்படி இருக்குன்னு பேசுவாங்க ஆனா இந்த பார்லர் அம்மா எப்ப இங்க இருந்து போகலாம்னு யோசிச்சிட்டு இருந்தது என்று பேசிக்கொள்கின்றனர்.
மறுபக்கம் ரவியின் ஹோட்டலில் ரீத்து எல்லாரையும் உட்கார வைத்து பொங்கலுக்கு ஏதாவது நம்ம கேம்ஸ் எல்லா புதுசா ஏதாவது பண்ணனும் என்று மீட்டிங் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார் நம்ம ஹோட்டலோட பெயர் நல்லா ரீச் ஆகணும் அதுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்று சொல்ல, அனைவரும் ஒரு ஐடியா சொல்லுகின்றனர். அந்த நேரம் பார்த்து ரவிக்கு சுருதி போன் போட்டுக் கொண்டே இருக்கிறார். ரெண்டு மூன்று தடவை போன் வர ரீத்து போனை சைலன்டில் போடுமாறு சொல்லுகிறார். இதனால் கடுப்பான சுருதி போன் பண்ணி கொண்டே இருக்க ரவி எடுக்காமல் இருக்கிறார்.
முத்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க அங்கு அவரது நண்பர் வரார். அவர் என்ன சொல்லுகிறார்?முத்துவின் பதில் என்ன? மீனாவிற்கு ஃபோன் போட்ட முத்து என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…