மீனாவை நினைத்து முத்து பெருமை பட, அசிங்கப்பட்டுள்ளார் சிந்தாமணி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மண்டபம் ஓனரிடம் சிந்தாமணி மற்றும் அந்த மேனேஜரை வசமாக மாட்டிவிட அவர் மேனேஜரை அறிந்து சிந்தாமணியை கண்டித்து மீனாவிற்கு பணத்தை வாங்கி கொடுக்கிறார். இதுக்கு மேல என் கண்ணு எதிரில் நீங்க இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இது மட்டும் இல்லாம அந்த மண்டபத்துல வர எல்லா ஆர்டரும் உனக்கு தான் அம்மா என்று சொல்ல ரொம்ப நன்றி சார் நன்றி சொல்லுகிறார்.
பிறகு மண்டப ஓனர் சென்றுவிட மீனா சிந்தாமணியிடம் வந்து நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச என் பணம் கைக்கு வந்துடுச்சு என்று சொல்ல சீதா என்னோட அக்காவா இருக்கவே புத்திசாலித்தனமா யோசிச்சு பணத்தை வாங்கி இருக்கா இதே எங்க மாமாவா இருந்தா அந்த மேனேஜர் நேரம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருப்பாங்க உன்னை அப்படியே அறையணும்னு தோணுது என்று கையை ஓங்க சிந்தாமணி என்ன அடிச்சிடுவியா அடி என்று கேட்கிறார். உடனே மீனா அடிக்க கூடாது என்ற அளவுக்கு நீ ஒன்னும் நல்லவங்களா கிடையாது திரும்பத் திரும்ப சொல்ற வாழு வாழ விடு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் பைனான்சியரிடம் பணம் கொடுக்க மீனா பயந்து கொண்டே போகிறார் உடனே பணம் கொடுத்துடோம்னு சொன்னோம் ஆனா ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா ஆயிடுச்சு என்ன திட்ட போறாங்கன்னு தெரியல என்று யோசித்து கொண்டே போக பைனான்சியர் அவர்களை வரவைத்து உட்கார வைக்கிறார். மீனா அவரிடம் என்ன மன்னிச்சிடுங்க சார் உங்களுக்கு உடனே தான் பணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் ஒரு பிரச்சனை ஆயிடுச்சு என்று சொல்ல அதற்கு அவர் மண்டபத்துல டெக்கரேஷன் முடிஞ்ச உடனே படம் கொடுத்துடுவாங்களே என்னம்மா ஆச்சு என்று கேட்க அவர் சிந்தாமணி பற்றி சொல்லுகிறார்.
அவங்க என்ன தொழில் போட்டியா நினைக்கிறாங்க அவங்க மட்டும் தான் இந்த தொழிலில் இருக்கணும்னு நினைக்கிறாங்க. நான் ஒரு ஒரு வாட்டியும் ஆர்டர் எடுக்கும்போது ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க என்று சொல்ல பைனான்சியர் முகம் மாறுகிறது. பிறகு சிந்தாமணி இடம் இருந்து எப்படி பணத்தை மீனா வாங்கினார் என்பதை சொல்ல சரிமா நீதான் புத்திசாலித்தனமா பணம் வாங்கிட்ட இல்ல இதே மாதிரியே தைரியமா இரு உனக்கு எப்ப பணம் தேவைப்பட்டாலும் எவ்வளவு தேவைப்பட்டாலும் என்கிட்ட வந்து கேளு என்று சொல்லுகிறார். நான் பணம் லேட்டா கொடுத்ததினால் நீங்க இதுக்கு மேல வராதுன்னு சொல்லிடுவீங்களோ என்று பயந்துட்டேன் என்று சொல்ல, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ தொழில்ல நேர்மையா இருந்தா கண்டிப்பா முன்னேறி வருவ என்று சொன்னவுடன் மீனா பணத்தை கொடுத்து விட்டு கிளம்ப அந்த பைனான்சியர் சிந்தாமணியில் போட்டோ முன் வந்து நின்று பார்க்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து சத்யாவும் மீனாவும் டீக்கடையில் டீ வாங்கி குடிக்க நின்று கொண்டிருக்கிற நான் மாமாவுக்கு போன் பண்ணி சொல்றேன் அவர்கிட்ட பொய் சொன்னதுல இருந்து மனச கேக்கல என்று சொல்லி முத்துவிற்கு ஃபோன் போடுகிறார். முத்துவிடம் மண்டபத்துல பணம் கொடுத்துட்டாங்க வேலை செஞ்சவங்களுக்கும் பைனான்ஸ்கராருக்கு பணம் கொடுத்துட்டேன் அவரு எப்ப வேணா வந்து வாங்கிக்கோன்னு சொல்லி இருக்காரு என்று சொல்ல முத்து சந்தோஷப்படுகிறார்.
உங்ககிட்ட இருந்து ஒரு உண்மையை மறைச்சுட்டேன் என்று மேனேஜர் பணத்தை ஏமாற்ற விஷயத்தை சொன்ன முத்து கோபப்படுகிறார் இவ்வளவு பெரிய பிரச்சனைல மாட்டி இருக்க என் கிட்ட சொல்லவே இல்ல என்று கேட்டு கோபப்படுகிறார். இரண்டு அர விட்டு வாங்கி இருக்கலாம் என்று சொல்ல அதனால தான் அங்க சொல்லல எல்லா பிரச்சினையும் முடிஞ்சது என்று சொல்ல முத்து மீனாவை நினைத்து கண்கலங்கி எமோஷனலாகிறார். அந்த சிந்தாமணி ஓவரா தான் பண்ணிக்கிட்டு இருக்கு என்று சொல்லிவிட்டு ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சனையை ஒரே ஆளா சமாளிச்சு இருக்க பெரிய விஷயம் என நம் தனிமையாக இருக்கும் போது தான் நம்மளோட பலம் என்னென்ன நம்மளுக்கு தெரியும் என்று சொல்லி பெருமையாக பேசிவிட்டு நான் நேர்ல வந்து பேசுகிறேன் என போனை வைத்து விடுகிறார்.
பிறகு வீட்டுக்கு வந்த முத்து சவாரி பற்றி பெருமையாக பேசுகிறார் என்ன பாராட்டி பேசுன பணத்தைவிட எக்ஸ்ட்ராவே கொடுத்தாங்க என்று சொன்னார் அண்ணாமலை நேர்மையாய் இருந்தால் நமக்கு தானா கிடைக்க வேண்டியது கிடைக்கும் என்று சொல்லுகிறார் அதைவிட மீனா பண்ண விஷயம் உங்களுக்கு தெரியும் அப்பா என்று கேட்க என்ன விஷயம் என்று கேட்கிறார். பிறகு நீங்க எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கீங்கன்னு அவ சொல்லி இருக்க மாட்டா அவளுக்கு வெளியில தான் தொழில் எதிரிங்க இருக்காங்கன்னு பார்த்தா பக்கத்திலேயே இருக்காங்க என்று சொல்ல விஜயாவின் முகம் மாறுகிறது. பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் முத்து சொல்கிறார்.
அதற்கு அண்ணாமலை என்ன சொல்லுகிறார்?விஜயாவின் பதில் என்ன? முத்து என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…