ரவி மீது கோபத்தில் முத்து. சமாதானம் செய்யும் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ரவியும் ஸ்ருதியும் காதலிக்கும் விஷயத்தை சொன்னதும் முத்து அதைக்கேட்டு கோபப்பட மீனா கதவை சாத்தி பொறுமையா பேசுங்க வெளியே மாமா இருக்காரு அவர் காதுல கேட்டா வருத்தப்படுவாரு என சொல்கிறார்.

என்ன பொறுமையா பேசுறது நான் அவ்வளவு தூரம் அவன் கிட்ட சொல்லியும் அவன் இதெல்லாம் பண்ணிக்கிட்டு திரியிறானா என கோபப்பட மீனா ஸ்ருதி நல்ல பொண்ணு என எடுத்து சொல்ல முயற்சி செய்ய முத்து யாரா வேணா இருக்கட்டும் ஆனால் இது செட் ஆகாது என கூறுகிறார். பிறகு இதை விடக்கூடாது எனக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என் கூட பாய் என்று சொல்லி மீனாவை அழைத்துக் கொண்டு ரவி வேலை செய்யும் ரெஸ்டாரண்டுக்கு வந்து சத்தம் போடுகிறார் முத்து.

மீனா முத்துவை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் கோபத்தை கட்டுப்படுத்தாமல் சத்தம் போட பிறகு ரவி முத்துவை வெளியே அழைத்து வந்து என்னடா பிரச்சனை என கேட்க இன்னமும் அந்த பொண்ணு கிட்ட பேசிகிட்டு தான் இருக்கியா என கேள்வி கேட்கிறார். ரவி எந்த பொண்ணு என கேட்க எத்தனை பொண்ணு கிட்ட பேசிட்டு இருக்க எந்த பொண்ணுனு கேக்குற என சொல்லி வாசுதேவன் பொண்ணு என சொல்ல ரவியும் ஸ்ருதி நல்ல பொண்ணு என கூறுகிறார்.

அந்த பொண்ணு நல்ல பொண்ணாவே இருக்கட்டும் ஆனா நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது அப்பாவ அந்த வாசுதேவன் எவ்வளவு அவமானப்படுத்தி இருக்கான். அது உனக்கே நல்லா தெரியும், அப்பா அது எல்லாத்தையும் நமக்காக பொறுத்துக்கிட்டு வேலை செஞ்சு இருக்காரு என அப்பாவின் அருமை பெருமையை எடுத்துக் கூறுகிறார். திரும்பவும் சொல்றேன் அந்த பொண்ணு கிட்ட பேசுறது இதோட நிறுத்திக்க உன் மனதிற்குள் ஏதாவது ஆசை இருந்தா அதை அப்படியே அழித்துவிடு என பொறுமையாக சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்ததாக இரவு மீனா தூங்கிக் கொண்டிருக்கும் போது முத்து மீனாவை எழுப்பி ரவி அந்த பொண்ணு கிட்ட பேச மாட்டான் தானே, நீ அவனிடம் பேசனியா? என கேள்வி கேட்க அதான் நீங்களே சொன்னீங்களே நான் திரும்பவும் வேற சொல்லனுமா என மீனா சொல்கிறார். முத்து இருந்தாலும் வயசு கோளாறு திரும்ப பேச தோணும் அவனுக்கு உடனடியாக ஒரு கல்யாணத்தை முடித்து விடனும் நாளைக்கு ஒரு இடத்துக்கு போகணும் நீ ரெடி ஆயிடு என சொல்லி படுத்து விடுகிறார்.

மறுநாள் காலையில் முத்து மீனாவை கூட்டிக் கொண்டு கிளம்ப மீனா எங்கே போறோம் என்று கேட்க எதுவும் சொல்லாமல் பூப்பழம் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு மீனாவின் வீட்டிற்கு வர ரவி கல்யாணம் விஷயம் சொல்லிட்டு இங்கே எதற்கு கூட்டிட்டு வந்தீர்கள் என கேள்வி கேட்க, வா உனக்கே தெரியும் என வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்.

பிறகு மீனாவின் அம்மாவை கூப்பிட்டு தாம்பூல தட்டில் எல்லாத்தையும் வைத்து சீதாவை பெண் கேட்க அவர் அதிர்ச்சி அடைகிறார். மீனாவும் ஒரு நிமிஷம் அதிர்ச்சி அடைந்து நிற்க முத்து ரவி ரொம்ப நல்ல பையன், சீதா ரொம்ப நல்லா பாத்துப்பான் என பெண் கேட்க மீனாவின் அம்மா வேண்டாம் மாப்ள என்று விஜயாவை நினைத்து பயப்படுவதை பற்றி கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது

siragadikka asai serial episode update 07-10-23
jothika lakshu

Recent Posts

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

14 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

17 hours ago

கருப்பு : ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…

20 hours ago

VEGULI – Official Teaser

VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ

20 hours ago

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

2 days ago