சீதா,அருண் காதலை ஏற்றுக் கொள்ளும் மீனா, செழியனுக்காக பாக்யா எடுக்கும் முயற்சி, சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ..!

சீதாவுக்காக மீனாவிடம் அருண் பேசுகிறார் மறுபக்கம் பாக்கியலட்சுமி செழியனை காப்பாற்ற போராடி வருகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் தான் சீதா காதலிக்கும் நபர் என்று முத்துக்கு தெரிந்த பின்பு இவர்கள் இருவரின் திருமணத்திற்கு முத்து தடையாக இருந்து வருகிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் அருணின் அம்மா சீதாவின் அம்மாவிடம் வந்து பேச அவர் என்னோட மாப்பிள்ளையோட முடிவு தான் என்று சொல்லிவிடுகின்றனர்.

மறுபக்கம் மீனாவை சந்தித்த அருண் நான் சீதாவை உண்மையா லவ் பண்றேன் என்ன புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன் என சொல்லி பேச மீனாவின் மனம் மாறுகிறது. வீட்டுக்கு வந்தவுடன் முத்து எங்க போயிட்டு வர என்று கேட்க அருண் என்கிட்ட வந்து பேசினார் என்று சொல்ல, அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருப்பாங்கன்னு எனக்கு தோணுது என்று சொல்ல அது கனவிலும் நடக்காது என்று முத்து சொல்ல இதனால் முத்து மீனாவிற்கு இடையே விரிசல் ஏற்படுமா? முத்து என்ன செய்யப் போகிறார்? என்ற பரபரப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாக உள்ளது.

அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்ததில் கவுன்சிலர் செழியன் மீது போலீசில் புகார் கொடுத்து அவரை அரெஸ்ட் செய்து அழைத்துச் சென்று விடுகின்றனர் இதனால் குடும்பத்தினர் அனைவரும் பாக்கியம் மீது வெறுப்பை காட்ட பாக்யா எப்படியாவது செழியனை வெளியில் எடுத்து வர வேண்டும் என்று கவுன்சிலிரிடம் பேச அவர் முடியாது என சொல்லி விடுகிறார்.உடனே பாக்யா மினிஸ்டரை சந்திக்க முயற்சி செய்கிறார். மினிஸ்டர் பாக்கியாவிற்கு உதவுவாரா? செழியனை எப்படி மீட்க போகிறார்?என்ற பரபரப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த இரண்டு சீரியல்களுமே இனி வரும் வாரங்களுக்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த இரண்டு சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

jothika lakshu

Recent Posts

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

6 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

6 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

6 hours ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

7 hours ago

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

1 day ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

1 day ago