மீனாவிடம் கோபப்பட்ட விஜயா, ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை முத்து மீனாவிடம் மன்னிப்பு கேட்க அவர்கள் நீ எதுக்குப்பா மன்னிப்பு கேக்குற என்று கலங்குகின்றனர். விஜயா மாறுவா மாறுவான்னு தான் நான் இதுவரைக்கும் பொறுமையாக இருந்தேன். ஆனா எனக்கு கொஞ்சம் நம்பிக்கையே இல்லை அவர் செஞ்ச தப்புக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்கிறார்.

மேலும் மீனாவின் பொறுமையை பாராட்ட இது எல்லாம் கோவிலில் இருந்து வந்த விஜயா படிக்கட்டில் நின்று ஒட்டு கேட்கிறார். அதன் பிறகு விஜயா உள்ளே வந்ததும் முத்து மீனாவை கூட்டிச்சென்று விட அண்ணாமலையும் விஜயாவும் பேசிக் கொள்வார்கள் என எதிர்பார்க்க அண்ணாமலை எதுவும் பேசாமல் மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார்.

அடுத்து முத்து சொன்னது போலவே மீனா பூரி, கிழங்கு மசாலாவையும் செய்து கொண்டிருக்க பூரிப்புல சந்தோஷமா இருக்க போல.. அதான் பூரி செஞ்சிட்டு இருக்கியா என்று கேட்கிறார். மேலும் அவர்கிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்கிட்ட பேச விடாம பண்ணிட்ட.. இப்போ உனக்கு சந்தோஷமா இதெல்லாம் எவ்வளவு நாளைக்குனு நானும் பார்க்கிறேன் என்று கோபப்பட்டு வெளியே வருகிறார்.

பிறகு மீனா ரோகினியை சாப்பிட கூப்பிட ரோகிணி வெளியே சாப்பிடுவதாக சொல்ல பூரியை பார்த்ததும் மனோஜ் இங்கேயே சாப்பிடலாம் நாம தான் மாசம் மாசம் காசு தருகிறோம்ல அப்புறம் எதுக்கு நாம வெளியே சாப்பிடணும் என்று சொல்ல ரோகிணி விஜயாவையும் கூப்பிட்டு வந்து சாப்பிட உட்கார அங்கு வந்த அண்ணாமலை விஜயாவை பார்த்ததும் up அப்புறம் சாப்பிடுறேன் என்று சென்று விடுகிறார்.

பிறகு சுருதி ஆன்ட்டி பண்ண வேலையால நீங்க இன்னைக்கு சமைச்சிருக்க மாட்டீங்கன்னு நினைச்சோம். நானா இருந்தா கிளம்பி போயிட்டே இருந்திருப்பேன் என்று சொல்ல முத்து பார்த்தியா பல குரலுக்கு தெரியுறது கூட உனக்கு தெரியல என்று சொல்கிறார். பிறகு அண்ணாமலை வெளியில போயிட்டு வரேன் என்று முத்து மீனாவிடம் மட்டும் சொல்லி விட்டு கிளம்ப விஜயா வருத்தப்பட்டு சாப்பிடாமல் எழுந்து கொள்கிறார்.

அடுத்து ஸ்ருதி வேலைக்கு கிளம்ப மீனா வீட்டில் நடந்த பிரச்சனைகளை உங்க வீட்டுல சொல்ல வேண்டாம் அதனால அத்தைக்கு தான் அவமானம் ஆகிடும் என்று கேட்டுக்கொள்ள ஸ்ருதி தப்பு யார் பண்ணாலும் தப்புதான் பெரியவங்க சின்னவங்க எல்லாம் எனக்கு பார்க்க தெரியாது இருந்தாலும் நீங்க சொன்னதுக்காக நான் இந்த விஷயத்தை என் வீட்டில சொல்லாம இருக்கேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

மனோஜ் கடையில் இருக்க கடைக்கு வந்த போலீஸ் உங்ககிட்ட இருந்து திருடின பொருட்களை இவர்கிட்ட தான் வித்து இருக்காங்க.. ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இவர் சில பொருட்களை வாங்கி இருக்காரு அந்த பொருட்களை எல்லாம் உங்ககிட்ட திருப்பி கொடுத்து விடுவதா சொல்றாரு என்று சொன்னதும் மனோஜ் சந்தோஷப்பட ஆனா அவர் கொடுத்து வாங்கின பணத்தை நீங்க திருப்பி தரணும் என்று போலீசார் ஷாக் கொடுக்கிறார். மனோஜ் நாங்க எதுக்கு பணத்தை தரணும் என்று கேட்க ரோகிணி அந்த பணத்தை நாங்க தந்து விடுகிறோம் என்று வாக்கு கொடுக்கிறார்.

அதன் பிறகு மனோஜ் பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்க ஜீவா கொடுத்த பணத்தில் மீதி கொஞ்சம் இருக்குல அதுல முத்துவுக்கு ரெண்டு லட்சம் இவருக்கு ஒரு லட்சம் கொடுத்து விடலாம் இப்போதைக்கு பிரச்சனையை தீர்க்க பார்க்கலாம் என்று சொல்கிறார்.

அடுத்து அண்ணாமலை புத்தகத்தை தட்ட அதில் இருந்து வந்த தூசியால் இரும்ப விஜயா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்க மறுத்து டைனிங் டேபிள் சென்று அவரே தண்ணீர் எடுத்து குடிக்கிறார். இதனால் விஜயா கோபப்பட்டு ரூமுக்குள் சென்றுவிட அண்ணாமலை ஷோபாவில் உக்காந்து யோசிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka Aasai Serial episode update
jothika lakshu

Recent Posts

கம்ருதீன் கேட்ட கேள்வி, ஆதிரை சொன்ன பதில், வெளியான பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…

4 hours ago

இட்லி கடை படத்தின் ஒன்பது நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

5 hours ago

மீனாவுக்கு புது பைக் வாங்கிய முத்து, ஹோட்டலுக்கு திறப்பு விழா நடத்திய ஸ்ருதி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

7 hours ago

திட்டம் போட்டு குழம்பில் உப்பு போட்டா கனி,பிரவீன்.. ஆதிரை கேட்ட கேள்வி, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

7 hours ago

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி செய்த விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

தேங்காய்ப்பாலில் இருக்கும் நன்மைகள்..!

தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

23 hours ago