தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரூம் பிரச்னையை பத்தி நெனச்சு கவலைப்படாதப்பா என்று சொல்ல மனோஜ் ஏன் நீ உன் பொண்டாட்டியும் வீட்டை விட்டு வெளியே போக போறீங்களா என்று கேள்வி எழுப்ப முத்து நான் இந்த வீட்டுக்கு ஆசைப்படுகிறேன் என்று சொல்லிட்டு என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பு பார்க்கிறான் என்று பதிலடி கொடுக்கிறார்.
பிறகு எங்களுக்கு ரூம் எல்லாம் வேண்டாம்.. நாங்க எங்கேயாவது ஒரு ஓரமா இருந்துக்குறோம் என்று சொல்ல விஜயா எப்பயாவது ஞானம் வந்துச்சே என்று சொல்கிறார். முத்து என்னால முடியும் போது நான் ரூம் கட்டுகிறேன் என்று சொல்ல ரோகிணி ஏற்கனவே போட்ட சப்பதமே இன்னும் முடியல அதுக்குள்ள இன்னொரு சபதத்தை போட்டுடாதீங்க என்று நக்கல் அடிக்க மீனா அவரே அவர் சொந்த பணத்துல ரூம் கட்டுவாரு என்று சபதம் போடுகிறார்.
இதனால் முத்து கோபமாகி மீனாவிடம் வந்து எதுக்கு என்னை கேட்காமல் சபதம் போட்ட என்று திட்ட நாம் அப்படி சொல்லலனா மாமா சும்மா இருக்க மாட்டாரு என்று சொல்ல முத்து நீ சொல்றதும் சரிதான் ஆனால் முதல் சபதமே முடியல அதுக்குள்ள இது பார்ட் 2 ஆ? எப்படி நம்மளால ரூம் கட்ட முடியும் என்று கேட்க உங்களால கண்டிப்பா முடியும் என்று மீனா ஊக்கம் கொடுக்கிறார்.
உடனே அப்படினா இனிமேல் மாசம் பணம் தர வேண்டாமா என்று மனோஜ் கேட்க பணம் தரவில்லை என்றால் வீட்டு செலவை எப்படி பார்க்கிறது என்று முத்து கேள்வி கேட்க அதான் அப்பாவோட பென்ஷன் பணம் வருதே என்று சொன்னதும் முத்து அப்போ அது கூட விட்டு வைக்க மாட்டியா என்று திட்டுகிறார்.
அடுத்து ரோகினி மனோஜை கூட்டிக்கொண்டு ஒரு கல்யாணம் பங்க்ஷனுக்காக ரெசார்ட் போக ஒரு பிளான் போட எதிர்பாராத விதமாக ஒரு பெரிய ஆர்டர் கிடைக்க மனோஜ் நீ மட்டும் அந்த கல்யாணத்துக்கு போயிட்டு வா என்று ஏமாற்றம் தருகிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு வரும் முத்து தங்களுடன் வந்து சர்ப்ரைஸ் கொடுத்து ரூம் கட்ட அடிக்கல் நாட்டப் போவதாக சொல்லி செங்கலை எடுத்து வர இதை பார்த்த விஜயா இப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தா உங்க அறுபதாம் கல்யாணத்துக்கு தான் ரூம் கட்ட முடியும் என்று நக்கல் அடிக்க மீனா அதுவரைக்கும் நான் இந்த வீட்ல இருப்பேன்னு அத்தை ஆசீர்வாதம் பண்றதா நினைச்சுக்கிறேன் என்று பல்பு கொடுக்கிறார்.
பிறகு இருவரும் மொட்டை மாடியில் செங்கலை அடுக்கி வைத்து அழகு பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…