தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா சொன்னதைக் கேட்டு முத்து என் ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாருக்கும் அவர் நம்மளோட சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோ அனுப்பி சென்னைல பார்த்தா சொல்ல சொல்றேன் என்று கூறுகிறார். இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
உடனே மறுநாள் காலையில் மலேசியா மாமாவை வீடியோ கால் செய்ய வைத்து குடும்பத்தாரை நம்ப வைக்க மீனா நான் தான் தப்பா புரிஞ்சுட்டு இருக்கேன் என்று சொன்னதும் முத்து எனக்கு இப்போதான் சந்தேகம் அதிகமாக இருக்கு. நீ ரோகினி கிட்ட மலேசியா மாமாவ பார்த்ததும் சொன்னதும் போன் கால் வருதுன்னா என்ன அர்த்தம் அந்த பார்லர் அம்மா கிட்ட ஏதோ வில்லங்கம் இருக்கு என்று சொல்கிறார்.
பிறகு மனோஜ் ரோகினியிடம் என்ன திடீர்னு உங்க மாமா போன் பண்ணி இருக்காரு எவ்வளவு நாளா போன் எதுவுமே இல்லாம தான் இருந்தது என்று கேட்கிறார். கூடிய சீக்கிரம் உங்க அப்பா பெரிய வந்துருவாருன்னு சொல்றாரு அவர் மட்டும் வந்துட்டா எனக்கு அது போதும் மலேசியாவுல ஒரு பெரிய பிரான்ச் ஆரம்பிச்சிடுவேன் என்று சொல்ல ரோகிணி நைசாக எஸ்கேப் ஆகி வெளியே வந்து விடுகிறார்.
பிறகு வித்யாவை பார்க்க வந்த ரோகினி ஒரு வழியா வீட்ல இருக்க எல்லாரையும் மாமா மலேசியாவில் தான் இருக்கிறார் என்று நம்ப வெச்சாச்சு இனிமே மீனா என்ன பண்ணாலும் யாரும் நம்ப மாட்டாங்க என்று சந்தோஷப்படுகிறார். அப்போது உள்ளே வந்த பிரவுன் மணி நீ சொன்னா மாதிரியே பேசி விட்டேனா என்று கேட்பதோடு ஒரே ஒரு அட்வைஸ் ரொம்ப நாளைக்கு இப்படி சொல்லி சமாளிக்க முடியாது. மாட்டிகிட்ட ரொம்ப கஷ்டப்படுவ என்று எச்சரித்து விட்டு செல்ல வித்யா இந்த ஆளு எனக்கு இப்படி சொல்லிட்டு போறான் என்று கேட்க ரோகிணி அதுக்குள்ள மனோஜை முழுசா என் கண்ட்ரோல்ல கொண்டு வரணும், எங்களுக்குள்ள ஒரு புது உறவு வரணும் என சொன்னதும் என்னடி சொல்ற என்று கேட்க எனக்கு மனோஜ்க்கும் ஒரு குழந்தை பிறக்கணும் என்று சொல்கிறார். இந்த வாழ்க்கையை விட்டு தர மாட்டேன் என்று ரோகிணி வில்லத் தனத்தோடு சொல்கிறார்.
அடுத்ததாக வீட்டில் ஸ்ருதி வீடியோ ஒன்றை பார்த்ததாக சொல்லி அந்த வீடியோவில் இருப்பது போலவே ரவியுடன் தன்னை தூக்கிக்கிட்டு நடக்க சொல்லி அடம் பிடிக்கிறார். ரவி இதெல்லாம் பண்ணா தான் காதலா என்னால முடியாது என்று சொல்ல அப்போ உனக்கு என் மேல அவ்வளவு தான் லவ்வா என்று மடக்கி ரவியை தூக்க வைக்கிறார். இதைப் பார்த்த முத்து மீனா என்ன இது என்று கேள்வி கேட்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…