தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து வசீகரனை துரத்திச் சென்று மடக்கி பிடித்து அடிக்க போலீஸ் சங்கு வந்து விட அவர்களிடம் நடந்ததை சொல்லி பிடித்துக் கொடுக்க சிட்டி இதை போட்டோ எடுத்து ரோகிணிக்கு அனுப்பி தான் தான் வசீகரனை சிக்க வைத்தது போல சொல்கிறார். போட்டோவை பார்த்த ரோகிணி சந்தோஷப்படுகிறார்.
அடுத்து பார்வதி வீட்டுக்கு வர விஜயா அவரிடம் எல்லா வேலையும் நான் தான் பார்க்கிறேன் என்று புலம்பிக் கொண்டிருக்க அதுக்கு முன்னாடி மீனா கடைய வெளியவே வச்சிருந்தா கடையிலும் பாத்துகிட்டு வீட்டு வேலையில் பார்த்துக்கிட்டா.. நாங்க வேற கார்ப்பரேஷனுக்கு போன் போட்டு அந்த கடையை எடுக்க வச்சிட்டு இப்போ எல்லா வேலையும் நான் பார்க்க வேண்டியதா இருக்கு இது புலம்பி செய்த தில்லாலங்கடி வேலை உளறி விடுகிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த ஒரு பெண்மணி பூக்கார அம்மா என்று கூப்பிட விஜயா கோபப்படுகிறார். பார்வதி பூ கட்ட பொண்ணு வீட்ல இல்ல என்று சொல்ல வந்தவர் போன் நம்பரை கேட்க விஜயா போன் நம்பர் எல்லாம் இல்லை என்று சொல்லி அனுப்ப அவர் பூக்கட்டியே இவ்வளவு பெரிய வீடு கட்டி வச்சிருக்கீங்க அப்போ திமிரு இருக்க தானே செய்யும் என்று பேசிவிட்டுச் செல்ல விஜயா எல்லாம் இதை மீனாவால் வந்தது என்று கோபப்படுகிறார்.
இதையடுத்து மீனா வீட்டுக்கு வந்ததும் வெளிய வெளியே நிற்க வைத்து என்னடி எல்லார்கிட்டயும் நான் உன்கிட்ட வேலை செய்றேன்னு சொல்லி வச்சிருக்கியா என்று கோபப்பட மீனா நான் இதுக்கு அப்படி சொல்ல போறேன் என்று கேள்வி கேட்கிறார். எல்லாரும் வந்து உன் போன் நம்பர் கேக்குறாங்க என்று சொல்ல கேட்டா கொடுக்க வேண்டியது தானே என்று மீனா பதில் சொல்கிறார்.
உன் நம்பர நான் எதுக்கு வச்சுக்க போறேன் என்று விஜயா சொல்ல மீனா ஆமா நீங்க என் நம்பர் எதுக்கு வச்சுக்க போறீங்க நான் யாரை விட்டு பொண்ணு தானே என்று இதுக்கும் கோல் போடுகிறார். இனிமே நீ வேலைக்கு போகாத என்று சொல்ல மீனு அது என் புருஷன் சொல்லட்டும் என்று பதிலடி கொடுக்கிறார்.
நான் இந்த வீட்ல சும்மா இருக்கறதுனால தான் எல்லாம் என்னை இளக்காரமா பாக்குறாங்க, ரோகினி இனிமே நான் உன் பியூட்டி பார்லருக்கு வேற என்ன சொல்ல ரோகிணி ஷாக் ஆகிறார். அங்க எதுக்கு ஆன்ட்டி என்று சொன்னதும் அப்படின்னா மனோஜ் கடைக்கு வந்து கல்லால உட்காருவேன் என்று சொன்னதும் ரோகினி நீங்களே பரதநாட்டியம் கிளாஸ் ஆரம்பிக்கலாம் என்று ஆசையை காட்ட விஜயா அப்படியா என்று கனவு காண தொடங்குகிறார். ரோகிணி ஆம் ஆண்ட்டி உங்களுக்கு தான் நல்லா பரதநாட்டியம் ஆட வருமே நீங்க ஒரு கிளாஸ் எடுக்க தொடங்குனீங்கன்னா நிறைய பேர் உங்ககிட்ட கத்துக்க வருவாங்க என்று சொல்ல பார்வதி அம்மா விஜயா நீ எங்க வீட்டுல கூட கிளாஸ் எடுத்துக்க என்று சொல்கிறார். ரோகிணி காஸ்டியூம்க்கு நான் ஏற்பாடு பண்றேன் என்று சொல்கிறார். போட்டோ வீடியோ எடுத்து சோசியல் மீடியாவுல போடலாம் என்று சொல்லி உள்ளே செல்கிறார்.
பிறகு பார்வதி மொத்த பேரையும் வீட்டுக்கு வரவைத்து பரதநாட்டியம் ஃபோட்டோ ஷூட் நடத்த மேக்கப் போட்டு தயார் ஆகுகிறார். வெளியில் எல்லோரும் என்ன விஷயம் என்று புரியாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…