பாட்டி கொடுத்த ஷாக்,முத்து செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாட்டி வீட்டுக்கு வர முத்து இன்னைக்கு என்ன நாள் தெரியுமா என்று கேட்க உங்களுக்கு கல்யாண நாள் அது தெரிந்து தான் வந்து இருக்கேன் என்று சொல்கிறார். அதன் பிறகு முத்து மீனாவுக்காக ஒரு மோதிரம் வாங்கி இருப்பதாக சொல்லி கொடுக்க அதை பார்த்து நல்லா இருக்குடா நீ ஏன் இப்படி எல்லாம் பண்ற என்று ஆச்சரியத்தோடு கேட்க அண்ணாமலை அவனை மீனா நல்லபடியா மாத்திட்டா என்று சொல்கிறார்.

எப்பவும் பொண்டாட்டி பேச்சை கேட்டு இப்படியே நல்லபடியா நடந்து கொள்ளும் என்று சொல்ல விஜயா என்ன அத்தை சொன்னீங்க பொண்டாட்டி பேச்சை கேட்டு நடந்துக்கணுமா என்று கேட்க நல்லது சொன்னா கேட்டு நடந்துக்கணும் கெட்டது யார் சொன்னாலும் கேட்கக்கூடாது என்று பதிலடி கொடுக்கிறார்.

முத்து மீனாவை மீனாவின் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். விஜயா டல்லாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து ரோகிணி என்ன ஆன்ட்டி உங்க மூஞ்சி டல்லாயிருச்சு என்று கேட்க பாட்டி வந்த அம்மாவுக்கு பியூஸ் போயிடும் என்று மனோஜ் சொல்கிறார். பாட்டி விஜயா என்று கூப்பிட ரோகினி இதோ வந்துட்டேன் அத்தை என்று மனோஜை பிடித்து தள்ளிவிட்டு செல்கிறார்.

அடுத்ததாக முத்து மீனா வீட்டுக்கு வர அக்கா எல்லோரும் வந்து வாழ்த்து சொல்லி நலம் விசாரிக்கின்றனர். பிறகு மேலே சென்றதும் மீனாவின் அம்மா, சீதா ஆகியோர் வாழ்த்து சொல்லி இந்த சட்டை உங்களுக்கு நல்லா இருக்கு என்று சொல்கிறனர். முத்து ஆமா பாட்டி கூட நல்லா இருக்குன்னு சொன்னாங்க எந்த கடையில வாங்குனீங்க என்று கேட்க மீனாவின் அம்மா நான் வாங்கலாமா மாப்பிள உங்களுக்காக சத்யா தான் பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்தான் என்று சொல்ல அதே சத்யாவும் வீட்டுக்கு வருகிறார்.

முத்து உங்க அம்மா வாங்குனதா தானே சொன்னேன் ஏன் அவன் வாங்கினான்னு சொல்லல என்று கேள்வி கேட்க மீனா யார் என்னங்க எங்க வீட்ல தானே வாங்கி கொடுத்தாங்க என்று சொல்ல சத்யா ஏன் நான் வாங்கி கொடுத்த சட்டையெல்லாம் போட மாட்டாரா என்று கேட்க இதையெல்லாம் போட்டா என்ன நானே செருப்பால அடிச்சுக்கிட்டதுக்கு சமம் என்று கழட்டி வீசியது வேகமாக கிளம்புகிறார் முத்து. மீனா பின்னாடியே ஓட எல்லோரும் முத்துவை நிறுத்த முயற்சி செய்கின்றனர்.

முத்து இப்போ நீ வரியா இல்லையா என்று கோபப்பட மீனா முத்துவுடன் கிளம்பி செல்கிறார்‌. இப்ப எதுக்கு சட்டையை கழட்டி போட்டுட்டு வந்தீங்க இப்படியே வீட்டுக்கு போனா உங்க அம்மா என்னதான் தப்பா பேசுவாங்க என்று கோபப்பட முத்து ஒரு துணி கடைக்கு காரை விடுகிறார். இப்படியாவா போய் சட்டை வாங்கினீங்க நான் போய் வாங்கிட்டு வரேன் என்று மீனா இறங்க முத்துவும் கூடவே இறங்கி வர கடைக்காரர் என்ன சார் பனியன் ஓட வந்து இருக்கீங்க என்று கேட்கிறார்.

அப்பதானே சட்டையை போட்டு பார்த்து வாங்க முடியும் அதனாலதான் என முத்து கவுண்ட்டர் கொடுக்க எங்க கடை மேல நீங்க வச்சிருக்க நம்பிக்கையை பார்த்து எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்று கடையில் வேலை பார்க்கும் எல்லோரையும் கூப்பிட்டு முத்துவுடன் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுத்து இந்த போட்டோவை நெட்ல போட்டு வைரல் ஆக்கணும். பெருசா பிரேம் போட்டு கடையில் மாற்ற வேண்டும் என்று சொல்ல மீனா சிரிக்கிறார்.

நெட்ல எல்லாம் போடாதீங்க ஒரு வைரலால் பெரிய பிரச்சனைல இருந்து இப்ப தான் வந்திருக்கேன் என்று முத்து சொல்ல அப்ப கடையில பெரிதா ப்ரேம் போட்டு மாட்டிக்கிறோம் என்று கேட்க முத்து அனுமதி கொடுக்கிறார். அதன் பிறகு ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு முத்து மீனா வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர்.

விஜயா வேலை செய்து களைப்பாக இருக்க மனோஜ் மற்றும் ரோகிணி என்னாச்சு என்று கேட்க வேலை செய்து களைப்பாக இருக்கு என்று சொல்ல மனோஜ் ரோகிணியை உதவிக்கு கூப்பிட வேண்டியதுதானே என்று சொன்னதும் ரோகினி மனோஜை பிடித்து கிள்ளுகிறார். அதன் பிறகு முத்து மீனா வீட்டுக்கு வர முத்துவின் ட்ரஸ் மாறி இருப்பதை பார்த்து விஜயா அங்கே என்னமோ நடந்திருக்கு என்று சந்தேகப்பட ரோகிணி மற்றும் மனோஜ்க்கும் அதே சந்தேகம் வருகிறது.

பாட்டியும் அண்ணாமலையும் முத்துவுடன் போகும் போது வேற சட்டை தானே போட்டுட்டு போன என்று கேட்க இதுவும் அவங்க எடுத்துக் கொடுத்த சட்டை தான் என்று முத்து சொல்ல மீனா டீ கொட்டிடுச்சு என்று ஒரே நேரத்தில் சொல்ல விஜயாவின் சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

ரோபோ ஷங்கர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்.!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…

4 hours ago

ரோபோ ஷங்கர் உடல் பாதிப்படைய காரணம் என்ன தெரியுமா? பிரபல நடிகர் சொன்ன விஷயம்.!!

ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…

5 hours ago

கிருஷ் பாட்டி சொன்ன வார்த்தை, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

5 hours ago

சுந்தரவல்லி கேட்ட கேள்வி,சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…

7 hours ago

உடல் நலக்குறைவால் நடிகர் ரோபோ சங்கர் காலமானார்..!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…

7 hours ago

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

23 hours ago