தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பார்வதி விஜயாவிடம் முத்து என்ன இப்படி பண்ணிடுச்சு என்று கேட்க விஜயா வயிறு எரியுது என்று சொல்ல அதுதான் சொல்லிட்டேனே என்று பார்வதி சொல்ல இல்ல பார்வதி உண்மையாகவே வயிளு எரியுது என்று சொல்கிறார். தண்ணி குடிச்சா சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயாவுக்கு வயித்தை கலக்க இரு இரு பார்வதி என்று ரூமுக்குள் ஓடுகிறார்.
அதன் பிறகு மீண்டும் வெளியே வந்து ஷோபாவில் உட்கார திரும்பவும் கலக்க ஓடுகிறார். பிறகு மனோஜ் வெளிய வந்து எதையோ சமைக்க சொல்லி கேட்க டேய் நீ வேற போடா என்று விஜயா திட்டி விட்டு பாத்ரூமுக்குள் ஓட ரோகினி மனோஜ் ஆகியோர் என்ன ஆச்சு என்று குழப்பம் அடைகின்றனர்.
விஜயா முடியாமல் துவண்டு போய் நின்று கொண்டிருக்க அண்ணாமலை உங்க அம்மாவுக்கு என்னடா ஆச்சு என்று கேட்க திரும்பவும் பாத்ரூமுக்குள் ஓடுகிறார். நடக்க கூட முடியாமல் பெட்டில் உட்கார்ந்து விஜயா பார்வதி என்று கூப்பிட்டு மயங்கி விழுகிறார். எல்லோரும் என்னன்னு தெரியாமல் பதற முத்து ஓடி வந்து தொட்டு பார்த்து காய்ச்சல் அடிக்குது நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன் என்று செல்கிறார்.
மறுபக்கம் மீனா மருந்து வாங்கி கொடுத்த அக்காவை பார்த்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் அதெல்லாம் ஒன்னும் ஆகாது வயித்தை கலக்கும் வாந்தி வரும் ஒரு ரெண்டு நாளைக்கு காரம் இல்லாம லேசான உணவை சாப்பிட்டால் சரியாக போய்விடும் என்று சொல்கிறார். அடுத்து விஜயாவை பரிசோதனை செய்த டாக்டர் சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்காம போயிருக்கும் இரண்டு நாளைக்கு கஞ்சி குடிங்க சரியா போயிடும் என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து மீனா வீட்டுக்கு வர முத்து எங்க போயிருந்த? அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதும் மீனா அத்தைக்கு என்னாச்சு என்று ரூமுக்குள் ஓடி வருகிறார். இங்கே அப்படி என்ன சாப்பிட்ட என்று பார்வதி கேட்டுக் கொண்டிருக்க விஜயா யோசித்துக் கொண்டிருக்க மீனா அத்தை ஆரஞ்சு ஜூஸ் குடிச்சாங்க என்று சொல்கிறார். ஜூஸ் குடிச்சா உடம்புக்கு நல்லது தானே என்று பார்வதி சொல்ல அதானே ஜூஸ் குடிச்சா எப்படி புட் பாய்ஸனாகும் என்று கேட்கிறார் மனோஜ். ரோகினி பழம் ஏதாவது கெட்டுப் போகி இருந்ததா என்று கேட்க மீனா அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார்.
அது இவருக்காக போட்டு வச்ச ஜூஸ் என்று மீனா சொல்ல முத்து அப்பா ஆரஞ்சு பழம் வாங்கிட்டு வந்து கொடுத்தார்னு சொன்னியே அதுவா என்று கேட்க அண்ணாமலை நான் யாருக்கும் பழத்தை வாங்கிட்டு வந்து தரல என்று சொல்கிறார். மீனா அதுல மருந்து கலக்கி வச்சிருந்தேன் விஜயா மருந்தா என அதிர்ச்சி அடைகிறார். என்னை கொல்றதுக்காக இப்படி பண்ணி இருக்கா என்று ஆவேசப்படுகிறார்.
இவர் குடியை விடனும் என்று ஒரு அக்கா அக்கா கிட்ட மருந்து வாங்கிட்டு வந்து அதை ஜூஸ்ல கலந்து வைத்திருந்தேன். அதைத்தான் அத்தை எடுத்து குடிச்சுட்டாங்க என்று சொல்ல மனோஜ் இவன் அதையே சரக்குல கலந்து தான் குடிப்பான் இவன் எப்பயும் கூடிய விடமாட்டான் என்று பேச முத்து எதுவும் பேச முடியாமல் கலங்கி நிற்கிறார். ஆளாளுக்கு மீனாவை பிடித்து திட்ட அண்ணாமலை அவர் புருஷனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சி பண்ணி இருக்கா அவ மேல தப்பு கிடையாது உங்க அம்மா எதுக்கு மத்தவங்களுக்கு போட்டு வச்ச ஜூஸை எடுத்து குடிக்கணும் என்று சொல்கிறார். அவன் பண்ண வேலையால அதிகமா அவமானப்பட்டு நின்னது மீனா தானே இப்பயாவது மத்தவங்களுக்கு புத்தி வரட்டும் என்று சொல்கிறார்.
பிறகு முத்து மொட்டை மாடியில் உட்கார்ந்து கலங்கிக் கொண்டிருக்க அங்கு வந்த மீனாவிடம் நிறைய பேர் குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடப்பாங்க அவங்க பொண்டாட்டிங்க அவங்கள சரி பண்றதுக்காக ஏதாவது பண்ணுவாங்க நானும் இப்போ அப்படி ஆகிட்டேன்ல என்று வருத்தப்பட உங்கள சரி பண்ண எனக்கு வேற வழி தெரியல என்று சொல்ல நான் சத்தியமா குடிக்கல மீனா என்று முத்து சொல்லியும் மீனா நம்பாமல் இருக்க முத்து அவர் மடிமீது படுத்து நீ வாங்கி கொடுத்த கார் அது நான் குடிச்சிட்டு ஓட்டுவேனா? சத்தியமா நான் குடிக்கல என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்.
அதன் பிறகு மீனா விஜயாவுக்கு கஞ்சி கொண்டு வந்து கொடுக்க உன்ன நம்பி இந்த வீட்ல நான் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் நீ அதுல ஏதாவது கலந்திருந்தாலும் கலந்திருப்ப என்று சொல்கிறார். பார்வதி அதனை வாங்கி குடிச்சு பாரு என்று சொல்ல அதிர்ச்சி அடையும் மீனா அதை குடித்து அதுல எதுவும் கலக்கல, கஞ்சி கிச்சன்ல இருக்கு உங்களுக்கு வேணும்னா குடிங்க இதுக்கு அப்புறம் உங்களோட விருப்பம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகிறார். பிறகு பார்வதி நீ போய் அந்த கஞ்சியை எடுத்துட்டு வா என்று சொல்கிறார்.
அடுத்ததாக ஸ்டேஷனுக்கு வந்த முத்து காரை கேட்க அங்கிருந்த கான்ஸ்டபில்கள் ஒரே நாள்ல ஒரு முழுக்க பேசுற மாதிரி பாப்புலர் ஆகிட்ட என்று கலாய்க்கின்றனர். குடித்து வண்டியை ஓட்டிட்டு கார் வேணுமா என்று கிண்டல் அடிக்க முத்து நான் குடிக்கல சார் என்று சொல்ல இப்ப குடிக்கலாம்னு தான் நல்லாவே தெரியுது என்று போலீஸ்காரர்கள் கேட்க நேற்றைய நான் குடிக்கல சார் என்று சொல்கிறார். முத்துவை பேப்பர் வாங்கிட்டு வா, எல்லாருக்கும் டீ வாங்கிட்டு வா மசால் வடை வாங்கிட்டு வா என்று வேலை செய்ய வைத்து வெளியே காத்திருக்க வைக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…