siragadikka aasai serial episode update 28-03-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மற்றும் மீனா இருவரும் உட்கார்ந்திருக்க மீனா முத்துவிடம் கால் ரொம்ப வலிக்குதா என்று கேட்கிறார்.
இப்ப பரவால்ல என்று சொல்லிவிட்டு போன் வர அங்கிருந்து எழுந்து சென்று போன் பேசிக் கொண்டிருக்க வாசுதேவனின் மனைவி அடுத்த ஆளை ஏவி விட அவர் முத்துவின் முத்துவின் முதுகில் பளார் என வைத்து நண்பன் என்று நினைத்து அடித்து விட்டதாக சொல்ல இதைப் பார்த்த மீனா அவரிடம் சண்டைக்கு போக பதிலுக்கு அவரும் சண்டைக்கு வர முத்து இருவரையும் அமைதியாக்கி மீனாவை கூட்டி வருகிறார். பிறகு முத்து இதெல்லாம் வேணும்னே நடக்குற மாதிரி இருக்கு என சந்தேகப்பட மீனா வேணும்னு யார் செய்ய போறாங்க என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து பார்வதி மீனாவை கூப்பிட்டது மீனா இங்கே இங்கே உட்கார்ந்துடுங்க அத்தை எது வேலை இருக்குன்னு கூப்பிடுறாங்க நான் போயிட்டு வரேன் என்று சொன்ன முத்து வேணாம், நீ என்கூடவே இல்லை நான் எங்கேயும் போகல இங்கேயே தான் இருப்ப உங்கள பாத்துக்கிட்டே தான் இருப்பேன் என்று சொல்லி உள்ளே செல்கிறார்.
பிறகு அண்ணாமலை மற்றும் அவரது நண்பரும் இங்கே வர முத்து அவர்களைக் கூட்டி உட்கார வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் விஜய அங்கு வந்து இங்கு எதற்கு உட்கார்ந்திட்டு இருக்கீங்க நாங்க சம்பந்தமே உங்க கிட்ட பேசணும்னு கூப்பிட்டதா சொன்னாங்க போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். இதைத்தொடர்ந்து அண்ணாமலை எழுந்து வாசுதேவன் அருகே வர வாசுதேவன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
இவர்களது ஆஃபீஸில் அதிகாரியாக வேலை செய்த ஒருவர் அண்ணாமலையை பார்த்துவிட்டு எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரிக்கிறார். நேர்மையான ஆளு நீங்கதான் என்று பாராட்ட அதைக் கேட்டு வாசுதேவன் கடுப்பாகிறார். சில சமயத்துல நாம நினைக்காதது இல்ல நடக்குது, குப்பை மேடெல்லாம் கோபுரமா மாறிவிடும் என அண்ணாமலையை அவமானப்படுத்துவது போல பேசுகிறார். அண்ணாமலை நல்ல வேளை இந்த நேரத்துல முத்து இல்ல, இதனால் பெரிய பிரச்சினையை உருவாகி இருக்கும் என நிம்மதி அடைகிறார்.
அதன் பிறகு ரோகினி ஏற்பாடு செய்தவர் முத்துவின் பின்னாடி வந்து உட்கார்ந்து நீங்களும் நானும் ஆறு மாசத்துக்கு முன்னாடி அசோக் நகர் ஒயின் ஷாப்பில் சந்தித்தோம் என்று பேச்சு கொடுக்க முத்து உங்கள பார்த்த மாதிரியே இல்லை என்று சொல்ல அவர் பார்த்ததும் தெரியாது பார்க்க பார்க்க தெரியும் நான் உங்களுக்கு தெரிய வைக்கிறேன் என தொடர்ந்து பேசுகிறார்.
ரோகிணியின் அப்பா வர நேரமாவதால் விஜயா முதலில் ஸ்ருதிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் செஞ்சிடலாம் என்று அண்ணாமலையிடம் கேட்க நீயே யோசிச்சு ஒரு முடிவெடு என சொல்லி விடுகிறார். முதலில் ஸ்ருதிக்கு பண்ணிடலாம் என்று முடிவெடுக்க மனோஜ் ரோகிணி தான் சீனியர் அதனால ரோகிணிக்கு தான் பண்ணனும் என்று சொல்ல விஜயா கொஞ்சம் வெயிட் பண்ணலாம் அவங்க அப்பா வந்து வரட்டும் அதுக்கு முன்னாடி ஸ்ருதிக்கு பண்ணிடலாம் என்று வாசுதேவன் குடும்பத்தில் பேச செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…