siragadikka aasai serial episode update 16-03-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வட்டிக்காரர் தண்டபாணி மீனாவின் பூக்கடையை நோட்டம் விட்டு கொண்டிருக்க விஜயா யார் நீங்க என்று கேட்க அவர் நீங்க யார் என திருப்பி கேட்டதும் நான் விஜயா என்று சொல்கிறார்.
ஓ அப்போ கடை உங்க பேர்ல தான் இருக்கா? ஆமாம் இது ஒரு கடை அதுல எனக்கு பெருமை வேறயா என சலித்து கொண்டு என் மருமகள் விஜயா பியூட்டி வேர்ல்ட் என்று பெரிய பியூட்டி பார்லர் வச்சிருக்கா, அது தான் எனக்கு பெருமை என்று சொல்ல மீனா அங்கு வந்து விட சீதா சொல்லி வந்ததாக 20,000 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு வட்டியை சரியாக கட்டிடணும் என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து மீனாவிடம் எதுக்கு டி பணம் வாங்குன? அதான் நிறைய சம்பாதிச்சியே அப்புறம் எதுக்கு பணம் என்று கேட்க தேவை இருக்கு வாங்கினேன் என்று பதில் சொல்ல அதான் என்ன தேவை என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
மீனா உங்களுக்கே சீக்கிரம் தெரிய வரும், கடைக்கு யாராவது வந்தா அப்புறம் வர சொல்லுங்க, நான் வெளியே போய்ட்டு வரேன் என கிளம்பி செல்கிறார். அடுத்து காரை பார்த்து பணத்தை காட்டுகிறார். பிறகு செல்வத்திடம் அவரை கூட்டி வந்து உங்க பிரண்டுக்கு கார் வாங்க போவதாக சொல்லி கூட்டி வந்து கார் எப்படி இருக்குனு கேளுங்கள் என்று சொல்லி வீட்டுக்கு வருகிறார்.
மனோஜ் பியூட்டி பார்லர் வர விஜயா பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து ஷாக் ஆகி ரோகினியை திட்ட பார்லரை பிராய்ச்சிஸ் உடன் இணைத்து விட்டதாகவும் நானும் ஒரு பார்னர் எனவும் அளந்து விட நிறைய ப்ராபிட் வரும் என சொன்னதை நம்பி விடுகிறார். உடனே மனோஜ் வீட்டுக்கு வந்து இந்த விஷயத்தை உடைக்க விஜயா அதிர்ச்சி அடைய ரோகிணி பின்னாடியே வந்து சமாளிக்கிறார்.
அப்போ இப்போதைக்கு பூ கடை ஒண்ணு தான் அம்மா பேர்ல இருக்கு என சொல்லும் முத்து, அப்படினா நீ கூட வேற மாதிரி பேரை மாத்தி வச்சிக்க மீனா என்று சொல்ல மீனா எப்பவும் அத்தை பேர் தான் இருக்கும் என சொல்கிறார்.
ரோகினி இன்னும் கொஞ்ச நாள்ல புது பார்லர் ஆரம்பித்து அதுக்கு உங்க பேரை தான் வைக்க போறேன் என ஐஸ் வைக்க விஜயா எல்லோர் முன்னாடியும் ரோகிணி எது செய்தாலும் சரியா தான் இருக்கும், அவ தான் என் பேர்ல் முதல்ல கடை ஆரம்பிச்சா, மத்தவங்க எல்லாம் அதை பார்த்து சூடு போட்டுக்கிட்டாங்க என சொல்லி ரூமுக்கு செல்கிறார்.
பின்னாடியே உள்ளே வந்த ரோகினி உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லையே என்று கேட்க கதை சாத்த சொல்லி வருத்தம் இல்லை பயங்கர கோபத்தில் இருக்கேன் என கொதிக்கிறார்.
யாரை கேட்டு பேரை மாத்துன? அந்த பார்லரை எப்படி திறந்தேனு மறந்து போச்சா? வீடு வீடா போய் மசாஜ் பண்ணிட்டு இருந்த உனக்கு நான் தான் பணம் கொடுத்தேன். அப்படி இருக்கும் போது உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க என ரோகினியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…